Contact Us

Tips Category View

ஏரோசெப்ட் கேப்சூல்

தேவையான சரக்குகள் :
1. நிலவேம்பு - 100 மி.கி.
2. வேப்பிலை - 100 மி.கி.
3. அமுக்கரா - 20 மி.கி.
4. திரிகடுகு - 100 மி.கி
5. திரிபலாதி - 100 மி.கி.
6. அவுரி - 20 மி.கி.
7. அகத்தி - 10 மி.கி.
8. வெட்சி - 10 மி.கி.    
9. வெற்றிலை - 10 மி.கி.
10. ஓமம் - 10 மி.கி.
11. லவங்கம் - 20 மி.கி.

தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை உலர்த்தி பொடி செய்து சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.

அளவு : 
1 -2 கேப்சூல்கள் வீதம் தினமும் 3 வேளைகள் ' உணவிற்கு முன் நீருடன் சாப்பிடவும்.

தீரும் நோய்கள்:
இது உடலில் கிருமியினால் உண்டாகும் விஷத்தன்மையை நீக்குகிறது. கிருமிகளை அழித்து உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இது ஒரு ஆன்டிசெப்டிக் கேப்சூலாகும்.