தேவையான சரக்குகள்:
1. அவுரி இலை -150 மி . கி
2. கீழாநெல்லி - 150 மி . கி
3. நிலவேம்பு - 100 மி . கி
4. அதிமதுரம் - 100 மி . கி
5. அன்னபேதி செந்தூரம் - 200 மி . கி
6. மண்டூரச் செந்தூரம் - 200 மி . கி
7. வெள்ளி பற்பம் - 200 மி . கி
தயாரிக்கும் முறை:
1-4 வரையுள்ள மூலிகைகளைத் தூய்மை செய்து உலர்த்தி பொடித்து சலித்து அத்துடன் 5-7 வரையுள்ளவற்றை கலந்து இடைவிடாது அரைத்து 500 மில்லி கிராம் வீதம் கேப்சூல்களில் நிரப்பி வைக்கவும். இவற்றைத் தூய்மையான காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல் வீதம் தினமும் 3 வேளை மற்றும் எல்லா வியாதிக்கும் துணை மருந்தாகவும் உபயோகிக்கலாம்
தீரும் வியாதிகள்:
மஞ்சள் காமாலை, பாண்டு,சோகை, அஜீரணக் கோளாறு, வாய்வு,கல்லீரல் நோய்கள் முதலியவற்றைப் போக்கும்.
தேவையான சரக்குகள்:
1.கடுக்காய் தோல் - 60 மி. கி
2. இந்துப்பு - 40 மி. கி
3. ஓமம் - 40 மி. கி
4. பூநீறு - 40 மி. கி
5. இஞ்சி - 40 மி. கி
6. எலுமிச்சை - 30 மி. கி
7. கண்ணாடிஉப்பு - 30 மி. கி
8. சோற்றுப்பு - 30 மி. கி
9. பொறரித்தவெண்காரம் - 30 மி. கி
10. திரிகடுகு - 30 மி. கி
11.கோஷ்டம் - 30 மி. கி
12. பெருங்காயம் - 30 மி. கி
13. பூண்டு - 30 மி. கி
14. கரி உப்பு - 30 மி. கி
தயாரிக்கும் முறை:
1-4 வரையுள்ள சரக்குகளை உலர்த்திப் பொடித்து நன்கு அரைத்து கலந்து 500 மி. கி வீதம் கேப்சூல்களில் அடைத்து காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல் வீதம் தினம் 3 வேளைகள்.
தீரும் வியாதிகள்:
அஜீரணம், புளித்த ஏப்பம், பசியின்மை, அமிலத்தன்மை, ருசியின்மை, நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றைப் போக்குகிறது
தேவையான சரக்குகள்:
1.அசோக பட்டை - 200 மி. கி
2. மூசாம்பரம் - 400 மி. கி
3.பப்பாளிப்பால் - 100 மி. கி
4.பெருங்காயம் - 100 மி. கி
5.பருத்தி வேர் - 100மி. கி
6.பிரம்மதண்டி - 100மி. கி
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட சரக்குகளை உலர்த்திப் பொடித்து அவற்றினை வஸ்திர காயம் செய்து நன்றாக அரைத்து 500 மி. கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப் புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.
அளவு :
2 கேப்சூல்கள் வீதம் 3 வேளைகள் 3 முதல் 5 நாட்களுக்கு மட்டும்.
பயன்கள்:
தாமதித்த மாதவிடாய், சூலைக்கட்டு, கர்ப்பப்பை அலர்ஜி மற்றும் வலி முதலியவற்றைப் போக்கி மாதவிடாயை ஒழுங்கு படுத்துகிறது.
பத்தியம்:
கடுகு, புளி, நல்லெண்ணெய் நீக்கவும் மாதவிடாய் உண்டாகும் வரை அரை வயிறு மட்டும் உண்ண வேண்டும். கர்பப ஸ்திரிகள் இக்கேப்சூலை உபயோகிக்கக் கூடாது.
தேவையான சரக்குகள்:
1. காட்டுக் கருணை - 60 மி. கி
2. பிரண்டை - 40 மி. கி
3. மருள் கிழங்கு - 60 மி. கி
4. குமரி வேர் - 60 மி. கி
5. மாம்பருப்பு - 40 மி. கி
6. கடுக்காய்த் தோல் - 40 மி. கி
7. சித்திர மூல வேர்ப்பட்டை - 60 மி. கி
8. கோரைக்கிழங்கு - 60 மி. கி
9. சரக்கொன்றை புலி - 60 மி. கி
10. தேத்தான் கொட்டை - 60 மி. கி
11. திரி கடுகு - 60 மி. கி
12. திரிபலா - 60 மி. கி
13. சீரகம் - 20 மி. கி
14. நத்தைச் சூரி - 40 மி. கி
15. முத்துச்சி சிப்பி பற்பம் - 40 மி. கி
16. சிலாசத்து பற்பம் - 40 மி. கி
17. வெள்ளி பற்பம் - 20 மி. கி
18. துத்தி - 180 மி. கி
தயாரிக்கும் முறை:
1-18 எண் வரையுள்ள சரக்குகளை உலர்த்திப் பொடித்து சலித்து வைக்கவும். இத்துடன் நத்தை பற்பம், முத்துச்சிப்பி பற்பம், சிலாசத்து பற்பம், வெள்ளி பற்பம் இவற்றினைக் கலந்து நன்றாக அரைத்து 50மி. கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி பயன்படுத்தவும்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினமும் 2 வேளைகள்.
பயன்கள்:
மூலம், பவுத்திரம், ரத்தமூலம், ஆசனவாய் எரிச்சல், அரிப்பு, மலச்சிக்கல் முதலிய நோய்களுக்கு ஏற்றது.
தேவையான சரக்குகள்:
1. சுத்தி செய்த கந்தகம் - 100 மி. கி
2. பரங்கிப்பட்டை - 100 மி. கி
3. அமுக்கிரா - 100 மி. கி
4. தண்ணீர்விட்டான் கிழங்கு - 100 மி. கி
5. நன்னாரி - 100 மி. கி
6. வல்லாரை - 100 மி. கி
7. ஓமம் - 100 மி. கி
8. சித்திரமூலப்பட்டை - 100 மி. கி
9. திரிபலா சூரணம் - 100 மி. கி
10. திரிகடுகு சூரணம் - 100 மி. கி
தயாரிக்கும் முறை:
1-8 எண் வரையுள்ள சரக்குகளை உலர்த்திப் பொடித்து அத்துடன் திரிகடுகு மற்றும் திரிபலா சூரணம் கலந்து நன்றாக அரைத்து 500 மி.கி கேப்சூல்களில் நிரப்பி, காற்றுப்புகாதகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினமும் 2 வேளைகள்.
பயன்கள்:
வெடிசூலை, மேகசூலை, இடிசூலை, தொழுநோய், விஷ நீர், சிரங்கு,புழுவெட்டு, தடிப்பு மூலம், பவுத்திரம், மேகம் ஆகியவற்றைப் போக்கி ரத்த சுத்திகரிப்புக்கு சிறந்தது.
தேவையான சரக்குகள்:
1. அருகன்புல் -500 மி. கி
தயாரிக்கும் முறை:
அருகம்புல்லை சேகரித்து தூய்மை செய்து உலர்த்தி அரைத்து, பொடித்து, சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் அடைத்து காற்றுப் புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினமும் 2 வேளைகள்
பயன்கள்:
எல்லா விதமான தோல் நோய்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொடுத்து உடம்பை பலப்படுத்துகிறது.
தேவையான சரக்குகள்
1. சிவப்பு துத்தி - 81.6 மி. கி
2. வில்வ பழம் - 102 மி. கி
3. வாய்விடங்கம் - 61.2 மி. கி
4. நாவல் கொட்டை - 102 மி. கி
5. சிறுகுறிஞ்சான் - 122.4 மி. கி
6. கடுக்காய் - 81.6 மி. கி
7. கோவை இலை - 122.4 மி. கி
8. பாகற்காய் - 122.4 மி. கி
9. சீந்தில்கொடி - 122.4 மி. கி
10. மஞ்சள் - 81.6 மி. கி
தயாரிக்கும் முறை:
வில்வப் பழத்தின் ஓடு நீக்கி உள்ளிருக்கும் சதையை உலர்த்தி பயன்படுத்தவும். மேற்கண்ட மற்ற மூலிகைகளை உலர்த்தி பக்குவப்படுத்தி பொடி செய்து சலித்து இடைவிடாது கம்பத்தில் நன்றாக அரைத்து 500 மி . கி கேப்சூல்களில் நிரப்பி பயன்படுத்தவும்.
அளவு:
காலை வெறும் வயிற்றில் 2 கேப்சூல் மாலை 2 கேப்சூல் தண்ணீர் அதிகமாக அருந்தவும். நடைப்பயணம் செய்வது நல்லது.
தீரும் நோய்கள்:
மதுமேகம், நீரழிவு, அதிக பசி, சோர்வு, அசதி, தாக வறட்சி, கைகால் எரிச்சல், அதி மூத்திரம், போன்ற மேக ரோகங்களுக்கு சிறந்த மூலிகை மருந்து. மேலும் சர்க்கரை நோய்க்கான சிறந்த நிவாரணி.
தேவையான சரக்குகள்:
1. சந்தனத்தூள் - 200 மி. கி
2. அதிமதுரம் - 100 மி. கி
3. கோந்து - 100 மி. கி
4. வால் மிளகு - 100 மி. கி
5. பூனைக்கண் குங்கிலியம் - 60 மி. கி
6. வெடியுப்பு - 60 மி. கி
7. வெள்ளை குங்கிலியம் - 60 மி. கி
8. சிலாசத்து பற்பம் - 200 மி. கி
9. ரோஜாப்பூ - 100 மி. கி
தயாரிக்கும் முறை:
1-4 வரையுள்ள மற்றும் 6,9 சரக்குகளை உலர்த்தி பொடித்து சலித்து அத்துடன் பூனைக்கண் குங்கிலியம், வெள்ளை குங்கிலியம், சிலாசத்து பற்பம் போன்றவற்றைக் கலந்து இடைவிடாது அரைத்து 500 மி. கி. வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப் புகாத இடங்களில் பத்திரப்படுத்தவும்.
அளவு:
1-2 கேப்சல்கள் வீதம் தினமும் 3 வேளைகள் மற்றும் எல்லா வியாதிகளுக்கும் துணை மருந்தாகவும் உபயோகிக்கலாம்.
தீரும் நோய்கள்:
மேகவெட்டை, நீர்க்கடுப்பு, சிறுநீரகக் கற்கள், வயிற்று எரிச்சல், பயணச்சூடு, வாய் துர்நாற்றம், அஜீரணம்,அதிக உஷ்ணம் ஆகியவற்றைப் போக்கச் சிறந்தது.
தேவையான சரக்குகள்:
1. சுண்டவற்றல் - 80 மி. கி
2. கருவேப்பிலை - 80 மி. கி
3. ஓமம் - 80 மி. கி
4. மாம்பருப்பு - 80 மி. கி
5. நெல்லிவற்றல் - 80 மி. கி
6. மாதுளம் பிஞ்சு தோல் - 80 மி. கி
7. வெந்தயம் - 80 மி. கி
8. வெட்டப்பாலயரிசி - 80 மி. கி
9. வில்வ பழம் - 80 மி. கி
10. கடுக்காய் - 80 மி. கி
11. ஆலம்பட்டை - 80 மி. கி
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட மூலிகைகளை நிழலில் உலர்த்தி பொடித்து சலித்து சுமார் 500 மி.கி. வீதம் ஒவ்வொரு கேப்சூல்களில் நிரப்பவும்.
தீரும் நோய்கள்:
அமீபியாசிஸ், வயிற்றுப்போக்கு, ரத்த சீதபேதி, கடுப்புக் கழிச்சல் (சீதபேதி), முதலியவை.
தேவையான சரக்குகள்:
1. லிங்க செந்தூரம் - 62.5 மி. கி
2. அன்னபேதி செந்தூரம் - 75.0 மி. கி
3. படிகார பற்பம் - 75.0 மி. கி
4. நிலவேம்பு - 100.0 மி. கி
5. பற்படாகம் - 100.0 மி. கி
6. கோரைக்கிழங்கு - 50.0 மி. கி
7. அமுக்கரா - 750.0 மி. கி
8. அகில் - 50.0 மி. கி
9. சுக்கு - 12.0 மி. கி
10. மிளகு - 12.0 மி. கி
11. திப்பிலி - 37.5 மி. கி
12. கடுக்காய் - 50.0 மி. கி
13. நெல்லிக்காய் - 100.0 மி. கி
14. தான்றிக்காய் - 100.0 மி. கி
15. கஸ்தூரி மஞ்சள் - 125.0 மி. கி
தயாரிக்கும் விதம்:
மேற்கண்ட மூலிகைகளை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடித்து சலித்து மேற்படி பற்பம் மற்றும் செந்தூரங்களைக் கலந்து இடைவிடாது நன்றாக கல்வத்தில் அரைத்து 500 மி. கி.வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப் புகாத குப்பிகளில் பத்திரப்படுத்தவும்.
உபயோகிக்கும் அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினம் இருவேளை வெந்நீரில் சாப்பிடவும். மற்றும் சிறு குழந்தைகளுக்கு கேப்சூல் உள்ளிருக்கும் பவுடரை இருவேளை வெந்நீரில் கரைத்துக் கொடுக்கவும்.
பயன்கள்:
காய்ச்சல்,உடம்பு வலி, மற்றும் வாத, பித்த, கபசுரங்களுக்கு ஏற்றது.
தேவையான சரக்குகள்:
1. கண்டங்கத்திரி - 150 மி. கி
2. துளசி - 150 மி. கி
3. எருக்கன் செடி - 150 மி. கி
4. திப்பிலி - 60 மி. கி
5. ஆடாதோடை - 220 மி. கி
6. அவுரி இலை - 70 மி. கி
7. தும்பை - 100 மி. கி
8. துளசி - 60 மி. கி
9. அதிமதுரம் - 140 மி. கி
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட மூலிகைகளை தூய்மை செய்து உலர்த்தி பொடித்து சலித்து அரைத்து அனைவரும் விதம் கேப்சூல்களில் நிரப்பி காற்று போகாத டப்பாக்கலில் பத்திரப்படுத்தவும்
அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினம் 2முதல்3 வேளைகள் வெந்நீரில் சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
தும்மல் , இருமல்,. ஈளை , நுரையீரல், அலர்ஜி, பிராங்கைய்டீஸ், இளைப்பு, ஆஸ்துமா.
தேவையான சரக்குகள்:
1. அசோகப்பட்டை - 100 மி. கி
2. துளசி - 100 மி. கி
3. சந்தனம் - 100 மி. கி
4. அரசம்பட்டை - 100 மி. கி
5. அதிமதுரம் - 100 மி. கி
6. மருதோன்றி இலை - 100 மி. கி
7. மிளகு - 100 மி. கி
8. பிரம்மதண்டி - 100 மி. கி
9. வெண் மருது - 50 மி. கி
10. அமுக்கரா - 50 மி. கி
11. குங்கிலிய பற்பம் - 50 மி. கி
12. சிலாசத்து பற்பம் - 50 மி. கி
தயாரிக்கும் முறை:
1-10 வரையுள்ள சரக்குகளை சுத்தம் செய்து உலர்த்தி, பொடித்து, சலித்து இத்துடன் குங்கிலிய பற்பம் மற்றும் சிலாசத்து பற்பம் கலந்து 500 மி. கி வீதம் கேப்சூல்களில் அடைத்து காற்றுப் புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினம் 3 வேளைகள்.
தீரும் நோய்கள்:
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை, வெட்டை, மாதவிடாய் கோளாறு, கர்ப்பாயச கோளாறு, இடுப்பு வலி, பலகீனம், சோகை மற்றும் வலியுள்ள மாதவிடாய் குணமாகும். பெண்களுக்கு சிறந்த டானிக்.
தேவையான சரக்குகள்
1. அன்னபேதி செந்தூரம் - 100 மி. கி.
2. ஆறுமுக செந்தூரம் - 100 மி. கி.
3. அயகாந்த செந்தூரம் - 100 மி. கி.
4. அயபிருங்கராஜ கற்பம் - 100 மி. கி.
5. சுயமாக்கினிச் செந்தூரம் - 100 மி. கி.
6. அவுரி - 100 மி. கி.
7.துளசி - 100 மி. கி.
8. வெடியுப்புச் சுண்ணம் - 100 மி. கி.
9. நெருஞ்சில் - 100 மி. கி.
தயாரிக்கும் முறை:
அவுரி, வெள்ளரி, துளசி, நெருஞ்சில் இவற்றை உலர்த்திப் பொடித்து இத்துடன் மேற்கண்ட செந்தூரம், கற்பம் மற்றும் சுண்ணம் வகையுடன் கலந்து நன்றாக அரைத்து ஒரு கேப்சூலில் 500 மி. கி. வீதம் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் நிரப்பிப் பயன்படுத்தவும்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினம் 2 வேளைகள்.
தீரும் நோய்கள்:
உடல் பருமனைக் குறைத்து தேவையற்ற சதையையும் கொழுப்பையும் கரைத்து, சீரான எடையும் சுறுசுறுப்பும் அளிக்க வல்லது.
தேவையான சரக்குகள்:
1. சர்பகந்தா -100 மி. கி.
2. நிலவேம்பு -100 மி. கி.
3. வெட்டிவேர் -100 மி. கி.
4. எலுமிச்சம் வேர் -100 மி. கி.
5. சந்தனத்தூள் -100 மி. கி.
6. பேய்ப்புடல் -100 மி. கி.
7. கோரைக்கிழங்கு - 100 மி. கி.
8. சுக்கு - 100 மி. கி.
9. மிளகு - 100 மி. கி.
10. அமுக்கரா - 100 மி. கி.
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட மூலிகைகளை சேகரித்து சுத்தம் செய்து உலர்த்தி பொடித்து, சலித்து நன்றாக அரைத்து 500 மி. கி. வீதம் கேப்சூல்களில் அடைத்து காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் விதம் தினம் 3 வேளைகள்.
தீரும் நோய்கள்:
நரம்பு, படபடப்பு, அதிக வியர்வை மற்றும் ரத்த அழுத்தத்தை சமன் செய்கிறது.
தேவையான சரக்குகள்:
1. சிற்றாமுட்டி - 100 மி. கி.
2. அமுக்கரா - 200 மி. கி.
3. கொடிவேலி - 150 மி. கி.
4. திரிகடுகு - 100 மி. கி.
5. நொச்சி - 400 மி. கி.
6. காந்த செந்தூரம் - 50 மி. கி.
தயாரிக்கும் முறை:
1-5 வரையுள்ள மூலிகைகளை நிழலில் உலர்த்தி பொடித்து, சலித்து இத்துடன் காந்த செந்தூரம் சேர்த்து இடைவிடாது நன்றாக கல்வத்தில் அரைத்து 500 மி. கி. வீதம் ஒவ்வொரு கேப்சூல்களிலும் நிரப்பி பத்திரப்படுத்தவும்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினம் 2முதல்3 வேளைகள் வெந்நீரில் சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
எல்லா வகையான வாத ரோகங்கள், மூட்டு வலி, வீக்கம், இடுப்பு வலி, நரம்பு வலி, தசை வலி எல்லா வகையான நீர்க்கட்டுகள்.
தேவையான சரக்குகள்:
1. சுக்கு -10 மி.கி.
2. ஓமம் -10 மி.கி.
3. மஞ்சள் -10 மி.கி.
4. வாய்விடங்கம் -10 மி.கி.
5. வசம்பு -10 மி.கி.
6. இலவங்கம் -10 மி.கி.
7. பரங்கிப்பட்டை -10 மி.கி.
8. கடுக்காய் தோல் -10 மி.கி.
9. கருஞ்சீரகம் -10 மி.கி.
10. காட்டு சீரகம் -10 மி.கி.
11. சிறுதேக்கு - 10 மி.கி.
12. தாளிசபத்திரி - 10 மி.கி.
13. திராட்சை - 10 மி.கி.
14. திப்பிலி - 10 மி.கி.
15. அரத்தை - 10 மி.கி.
16. கோஷ்டம் - 10 மி.கி.
17. வாலுளுவை அரிசி - 10 மி.கி.
18. சோம்பு - 10 மி.கி.
19. ஏலம் - 10 மி.கி.
20. ஜாதிக்காய் - 10 மி.கி.
21. மிளகு - 10 மி.கி.
22. சீரகம் - 10 மி.கி.
23. கார்போக அரிசி - 10 மி.கி.
24. திப்பிலிக் கட்டை - 10 மி.கி.
25. மாசிக்காய் - 10 மி.கி.
26. தேற்றான் விதை - 10 மி.கி.
27. நீர் முள்ளி விதை - 10 மி.கி.
28. எள்ளு - 10 மி.கி.
29. சங்கன் வேர் - 10 மி.கி.
30. அமுக்கரா வேர் - 10 மி.கி.
31. ஆகாயகருடன் கிழங்கு - 10 மி.கி.
32. சித்திர மூல வேர்பட்டை - 10 மி.கி.
33. இரசம் (சுத்தி செய்தது) - 10 மி.கி.
34. சுத்தி செய்த கந்தகம் - 10 மி.கி.
தயாரிக்கும் முறை:
இரசத்தையும், கந்தகத்தையும் கருப்பு நிறம் வரும் வரை நன்றாக அரைக்கவும். மற்ற சரக்குகளை இடித்துச் சலித்து வைக்கவும். சூரணத்தையும் பொடித்த சரக்குகளையும் ஒன்று சேர்த்து ஒரு மணி நேரம் நன்கு இடித்து உலர்த்தி பின் 500 மி.கி. வீதம் கேப்சூல்களில் நிரப்பி பத்திரப்படுத்தவும்
தீரும் வியாதிகள்:
எல்லாவிதமான தோல் வியாதிகள், ஆரம்ப குஷ்டம், ஆரம்ப புற்றுநோய்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் தினமும் 2 முதல் மூன்று வேலைகள் பால் அல்லது மோருடன் பருகவும்.
தேவையான சரக்குகள்:
1. வல்லாரை - 207.5 மி.கி.
2. அதிமதுரம் - 207.5 மி.கி.
3. அன்னபேதி செந்தூரம் - 207.5 மி.கி.
4. இலவங்கம் - 20.7 மி.கி.
5. சிறு நாகப்பூ - 20.7 மி.கி.
6. ஏலம் - 20.7 மி.கி.
7. மிளகு - 20.7 மி.கி.
8. திப்பிலி - 20.7 மி.கி.
9. சுக்கு - 20.7 மி.கி.
10. அமுக்கரா - 207.5 மி.கி.
11. ஓரிதழ் தாமரை - 20.7 மி.கி.
12. ஜாதிக்காய் - 20.7 மி.கி.
13. தங்க பற்பம் - 2 மி.கி.
14. பூரண சந்திரோதயம் - 2 மி.கி.
தயாரிக்கும் முறை:
அன்னபேதி செந்தூரம், தங்க பற்பம், பூர்ண சந்திரோதயம் தவிர மற்ற சரக்குகளை உலர்த்தி பொடித்து, சலித்து முதலில் குறிப்பிட்ட வகைகளுடன் கலந்து அரைத்து 500 மி.கி. வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல் காலை,இரவு பாலில் சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
தாது நஷ்டம், நரம்புத் தளர்ச்சி, விரைந்து விந்து வெளியேறுதல், ஆண் தன்மை குறைவு, நரம்புக்கு வலுவூட்டி இழந்த சக்தியை மீண்டும் இளமை உணர்வுடன் திகழவும் செய்யும்.
தேவையான சரக்குகள்:
வல்லாரை - 500 மி.கி.
தயாரிக்கும் முறை:
வல்லாரை இலையை சேகரித்து உலர்த்தி, பதப்படுத்தி, 500 மி.கி. விதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப் புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினம் 2 வேளைகள்.
தீரும் நோய்கள்:
ஞாபக மறதி, இரத்த சுத்தமின்மை, மலச்சிக்கல், சோர்வு ஆகியவற்றைப் போக்கி உற்சாகம் தரும் இனிய மருந்து.
தேவையான சரக்குகள்:
1. அதிமதுரம் - 100 மி.கி.
2. அருகம்புல் - 100 மி.கி.
3. சந்தனம் - 100 மி.கி.
4. கீழாநெல்லி - 100 மி.கி.
5. குப்பைமேனி - 50 மி.கி.
6. மிளகு - 50மி.கி.
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட மூலிகைகளை நன்கு நிழலில் காய வைத்து பொடியாக்கி அவற்றை காலி கேப்சூல்களில் 500 மி.கி. வீதம் நிரப்பி பயன்படுத்தவும்.
அளவு:
1-2 கேப்சூல்கள் பால் அல்லது நீருடன்.
பயன்கள்:
முகப்பரு, கரும்புள்ளிகள் இவற்றைப் போக்கி முகத்திற்கு பளபளப்பு உண்டாக்கும்.
தேவையான சரக்குகள்:
1. கடுக்காய் - 150 மி.கி.
2. நிலவாகை - 200 மி.கி.
3. நெல்லி - 150 மி.கி.
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட பொருள்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்ந்த பின் அவற்றைப் பொடித்து அப்பொடியினை 500 மி.கி.வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு:
1-2 கேப்சூல்கள் விதம் இரவு வெந்நீரில் உட்கொள்ளவும்.
பயன்கள்:
மலமிளக்கியாக செயல்படும்.
தேவையான சரக்குகள்:
1. கரிசலாங்கண்ணி - 150 மி.கி.
2. அவுரி - 50 மி.கி.
3. நிலவேம்பு - 50 மி.கி.
4. கீழாநெல்லி - 150 மி.கி.
5. ஆவாரை - 100 மி.கி.
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட பொருள்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றைப் பொடித்து அப்பொடியினை 500 மி.கி.வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு:
1-2 கேப்சூல்கள் தினமும்.
பயன்கள்:
குடிப்பழக்கத்தினால் உண்டாகும் நச்சுத் தன்மையைக் குறைக்கும். குடிப்பழக்கத்திலிருந்து விடுபட பயனுடையதாக இருக்கும்.
தேவையான சரக்குகள்:
வேப்பிலை - 500 மி. கி.
தயாரிக்கும் முறை:
வேப்பிலைய கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்ந்த பின் அவற்றைப் பொடித்து அப்பொடியினை 500 மி.கி. வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு:
1-2 கேப்சூல்கள் தினம் 3 வேளைகள்.
தீரும் நோய்கள்:
புழுக்கொல்லியாகவும், இரத்தத்தை சுத்தப்படுத்தவும் பயன்படும்.
தேவையான சரக்குகள்:
1.ஓரிதழ் தாமரை - 50 மி. கி.
2.கருவேப்பிலை - 200 மி. கி.
3. மஞ்சள் கரிசாலை - 250 மி. கி.
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட பொருள்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றைப் பொடித்து அப்பொடியினை 500 மி. கி. வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு:
2-3 கேப்சூல்கள் வீதம் 2 முதல் 3 வேளைகள்.
பயன்கள்:
இரத்த சோகை மற்றும் இரும்புச்சத்து குறைவு, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு உண்டாகும் இரும்புச் சத்துக் குறைவினை குணப்படுத்த வல்லது.
தேவையான சரக்குகள்:
1. பிரம்மத்தண்டி - 150 மி. கி.
2. மருதோன்றி - 150 மி. கி.
3. சந்தனம் - 150 மி. கி.
4. எருக்கு - 150 மி. கி.
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட பொருள்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றைப் பொடித்து அப்பொடியினை 500 மி.கி.விதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு:
1-2 கேப்சூல்கள் தினமும்.
பயன்கள்:
சருமங்களில் உண்டாகும் பருக்கள் மற்றும் பாலுண்ணிகளை நீக்க வல்லது.
தேவையான சரக்குகள்:
1. நெல்லிக்காய் - 120மி. கி.
2. கடுக்காய் - 130மி. கி.
3. அதிமதுரம் - 130மி. கி.
4. வெற்றிலை - 120மி. கி.
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட பொருள்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு:
1-2 கேப்சல்கள் தினம் 3 வேளைகள்.
தீரும் நோய்கள்:
டான்சில், காய்ச்சல் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கங்களை குணப்படுத்த வல்லது.
தேவையான சரக்குகள்:
1. கருவேப்பிலை -100 மி. கி.
2. அமுக்கரா -100 மி. கி.
3. முருங்கை இலை -100 மி. கி.
4. அருகம்புல் -100 மி. கி.
5. அகத்திக்கீரை -100 மி. கி.
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட பொருள்களை கல்,மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி.வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு :
2 முதல் 3 கேப்சூல்கள் பாலுடன் உபயோகிக்கவும்.
பயன்கள் :
உடலில் ஏற்படும் கால்சியம் குறைவை சமன் செய்கிறது.
தேவையான சரக்குகள் :
1. சதாவரி - 150 மி.கி.
2. திரிகடுகு - 50 மி.கி.
3. சதகுப்பை - 50 மி.கி.
4. கொத்தமல்லி - 50 மி.கி.
5. வாய்விடங்கம் - 50 மி.கி.
6. சீரகம் - 50 மி.கி.
7. ஏலம் - 50 மி.கி.
8. சிறுநாகப்பூ - 50 மி.கி.
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றைப் பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு :
2 முதல் 3 கேப்சூல்கள் தினம் 3 வேளைகள்.
தீரும் நோய்கள் :
பிரசவத்திற்குப் பின் தாய்மார்களுக்கு அதிக பால் சுரக்கச் செய்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமளிக்கும்.
தேவையான சரக்குகள் :
1. அவுரிவேர் - 100 மி.கி
2. மிளகு - 100 மி.கி.
3. வேப்பிலை - 100 மி.கி.
4. அகத்தி - 100 மி.கி.
5. சிறுகீரை - 50 மி.கி.
6. சிறியாநங்கை - 50 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றைப் பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு :
1 -2 கேப்சூல்கள் தினம் 2 வேளைகள்.
தீரும் நோய்கள்:
பூச்சிக்கடியால் உண்டாகும் விஷத்தன்மையை நீக்க வல்லது.
தேவையான சரக்குகள் :
1. கற்பூரவல்லி - 100 மி.கி.
2. துளசி - 100 மி.கி.
3. முசுமுசுக்கை - 100 மி.கி.
4. அரத்தை - 100 மி.கி.
5. அதிமதுரம் - 100 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றைப் பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு:
1 -2 கேப்சூல்கள்
தீரும் நோய்கள்:
பீனிச நோய்கள், இளைப்பு, தும்மல் மற்றும் விக்கல்களை குணப்படுத்த வல்லது.
தேவையான சரக்குகள் :
1. அஸ்வகந்தா பொடி - 500 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றைப் பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு :
1 -2 கேப்சூல்கள் தினம் 3 வேளைகள்.
தீரும் நோய்கள் :
உடல் பலவீனம் மற்றும் நரம்புகள் பலவீனத்தை குணப்படுத்த வல்லது.
தேவையான சரக்குகள் :
1. செம்பருத்தி - 150 மி.கி.
2. அவுரி - 50 மி.கி.
3. பொன்னாங்கண்ணி - 50 மி.கி.
4. கரிசாலை - 70 மி.கி.
5. கருவேப்பிலை - 70 மி.கி.
6. சீரகம் - 50 மி.கி.
7. சித்தகத்திப்பூ - 60 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு :
1 -2 கேப்சூல்கள் தினம் 2 வேளைகள்
தீரும் நோய்கள்:
நீண்ட கருமையான, அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
தேவையான சரக்குகள் :
1. அமுக்கரா -100 - மி.கி.
2. திரிபலா - 100 மி.கி.
3. ஓரிதழ் தாமரை - 100 மி.கி.
4. கட்டுக்கொடி - 100 மி.கி.
5. சதாவரி - 100 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத. டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு :
1-2 கேப்சூல்கள் தினம் 2 வேளைகள்
தீரும் நோய்கள்:
மன அழுத்தம், மன உடல் உளைச்சலை குணப்படுத்த வல்லது.
தேவையான சரக்குகள் :
1. அதிமதுரம் - 80 மி.கி.
2. பரங்கிப்பட்டை - 80 மி.கி.
3. ஆடுதீண்டாபாளை - 80 மி.கி.
4. வெள்ளருகு - 80 மி.கி.
5. வேப்பிலை - 80 மி.கி.
6. திரிகடுகு - 50 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்ந்த பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு :
2 முதல் 3 கேப்சூல்கள் தினம் 2 வேளைகள்.
தீரும் நோய்கள் :
இரத்த சுத்திக்கு ஏற்றது.
தேவையான சரக்குகள் :
1.வசம்பு - 100 மி.கி.
2. ஓமம் - 100 மி.கி.
3. கிராம்பு - 100 மி.கி.
4. மிளகு - 100 மி.கி
5. திரிகடுகு - 100 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு :
1 -2 கேப்சூல்கள் தினம் 3 வேளைகள்
தீரும் நோய்கள் :
மூட்டுகளில் உண்டாகும் வலி, சுளுக்கு, தலைவலி மற்றும் எலும்பு முறிவதனால் உண்டாகும் வலி முதலியன குணமாகும்.
தேவையான சரக்குகள் :
1. அருகம்புல் - 150 மி.கி
2. சதாவரி - 130 மி.கி
3. அதிமதுரம் - 120 மி.கி
4. கொடிவேலிவேர் - 100 மி.கி
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு :
1 -2 கேப்சூல்கள் தினம் 2 வேளைகள்.
தீரும் நோய்கள்:
பாலுண்ணி மற்றும் பருக்களை குணப்படுத்த வல்லது.
தேவையான சரக்குகள் :
1. நெருஞ்சில் - 150 மி.கி.
2. அருகம்புல் - 150 மி.கி
3. அதிமதுரம் - 100 மி.கி.
4. அமுக்கரா - 100 மி.கி.
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடி செய்து அப்பொடியினை சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு :
1 -2 கேப்சூல்கள் வீதம் தினமும் 3 வேளைகள் உணவிற்கு முன் நீருடன் உட்கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள்:
தைராய்டு சுரப்பியை நன்கு இயங்கச் செய்து தைராய்டு குறைபாடினால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும்.
தேவையான சரக்குகள் :
1. சிவகரந்தை - 100 மி.கி
2. நித்யகல்யாணி - 100 மி.கி
3. அருகம்புல் - 100 மி.கி
4. வல்லாரை - 100 மி.கி
5. துளசி - 50 மி.கி.
6. அமுக்கரா - 50 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு :
1 -2 கேப்சூல்கள் வீதம் தினமும் 2 வேளைகள் உணவிற்கு முன் நீருடன் சாப்பிடவேண்டும்.
தீரும் நோய்கள்:
ஆரம்பப் புற்று, கட்டிகள், வயிற்றுப்புண்.
தேவையான சரக்குகள்:
1. சுண்டை - 100 மி.கி
2. சோயாபீன்ஸ் - 100 மி.கி
3. அகத்தி - 100 மி.கி
4. அமுக்கரா - 100 மி.கி
5. அருகம்புல - 100 மி.கி.
தயாரிக்கும் முறை
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப் பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப் புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு :
1 -2 கேப்சூல்கள் தினம் 2 வேளைகள்.
தீரும் நோய்கள் :
குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்துக்களை அளிக்க வல்லது.
தேவையான சரக்குகள்:
1. அஸ்வகந்தா - 250 மி.கி
2. மருதாணிப்பூ - 250 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுதவும்.
அளவு:
2 கேப்சூல்கள் தினம் இரவு வேளையில் உட்கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள் :
சுகமான நிம்மதியான உறக்கத்தை எந்தவித பக்க விளைவுகளும் இன்றி தர வல்லது.
தேவையான சரக்குகள் :
1. அருகம்புல் - 50 மி.கி
2. வேப்பிலை - 50 மி.கி
3. ஓரிதழ் தாமரை - 50 மி.கி
4. மருதம்பட்டை - 50 மி.கி.
5. அதிமதுரம் - 50 மி.கி.
6. நெல்லியிலை - 50 மி.கி.
7. துளசி - 50 மி.கி
8. ஆவாரம் பூ - 50 மி.கி.
9. கீழாநெல்லி - 50 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை உலர்த்தி பொடி செய்து சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத ப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
தீரும் நோய்கள் :
எந்தவித நோயானாலும் மருந்து உட்கொள்வதற்கு முன் சாப்பிட வேண்டிய மருந்தாகும்.
தேவையான சரக்குகள்:
1. அவுரி - 100 மி.கி.
2. ஆடாதோடை - 100 மி.கி
3. துளசி - 100 மி.கி
4. வேப்பிலை - 100 மி.கி
5. அகத்தி - 100 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை உலர்த்தி பொடி செய்து சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு:
1 -2 கேப்சூல்கள் வீதம் தினமும் 3 வேளைகள்
தீரும் நோய்கள்:
புகையிலையை உபயோகிப்பதாலும், புகைப்பிடிப்ப தாலும் உண்டாகும் நச்சுத் தன்மையை நீக்குகிறது.
தேவையான சரக்குகள் :
1. நிலவேம்பு - 100 மி.கி.
2. வேப்பிலை - 100 மி.கி.
3. அமுக்கரா - 20 மி.கி.
4. திரிகடுகு - 100 மி.கி
5. திரிபலாதி - 100 மி.கி.
6. அவுரி - 20 மி.கி.
7. அகத்தி - 10 மி.கி.
8. வெட்சி - 10 மி.கி.
9. வெற்றிலை - 10 மி.கி.
10. ஓமம் - 10 மி.கி.
11. லவங்கம் - 20 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை உலர்த்தி பொடி செய்து சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு :
1 -2 கேப்சூல்கள் வீதம் தினமும் 3 வேளைகள் ' உணவிற்கு முன் நீருடன் சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
இது உடலில் கிருமியினால் உண்டாகும் விஷத்தன்மையை நீக்குகிறது. கிருமிகளை அழித்து உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இது ஒரு ஆன்டிசெப்டிக் கேப்சூலாகும்.
தேவையான சரக்குகள் :
1. கருவேப்பிலை - 150 மி.கி.
2. அமுக்கரா - 100 மி.கி.
3. அதிமதுரம் - 100 மி.கி.
4. அரைக்கீரை - 150 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை உலர்த்தி பொடி செய்து சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
தீரும் நோய்கள் :
முறிந்த எலும்புகள் இணைவதற்கும், எலும்புகளுக்கு சக்தியளிப்பதற்கும் ஏற்றது.
தேவையான சரக்குகள் :
1. அமுக்கரா - 100 மி.கி.
2. ஓரிதழ்தாமரை - 100 மி.கி.
3. கட்டுக்கொடி - 100 மி.கி.
4. நீர்முள்ளி - 50 மி.கி.
5. சதாவரி - 50 மி.கி.
6. திரிகடுகு - 50 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை உலர்த்தி பொடி செய்து சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு :
1 -2 கேப்சூல்கள் வீதம் தினமும் 2 வேளைகள் உணவிற்குப் பின் பாலுடன் உட்கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள்:
விந்தணு குறைபாடு, உடல் பலஹீனம், உடலுறவில் நாட்டமின்மை, விந்து விரைந்து வெளியேறுதல் முதலியன.
தேவையான சரக்குகள் :
1.துளசி -100 மி.கி.
2. அருகம்புல் - 100 மி.கி.
3. அதிமதுரம் -100 மி.கி.
4. கீழாநெல்லி -100 மி.கி.
5. வெள்ளருகு -100 மி.கி.
6. திரிபலா -50 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத பயன்படுத்தவும். டப்பாக்களில் பத்திரப்படுத்தி
அளவு :
2-3 கேப்சூல்கள் வீதம் தினமும் 2 வேளைகள் உட்கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள் :
சளி மற்றும் ஜலதோஷத்தால் உண்டாகும் அசதியையும் குணப்படுத்தும்.