தேவையான பொருட்கள்:
1. கற்றாழைச் சாறு-1 கி.கி.
2. சர்க்கரை-500 கி
3. சுக்குப் பொடி-10 கி
4. ஏலப்பொடி-10 கி
5. விதை நீக்கிய பேரிச்சம்பழம்- 250 கி
செய்முறை:
கற்றாழைச் சோற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 7 முறை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து சர்க்கரையுடன் சேர்த்து காய்ச்சி பதத்தில் எடுத்து, சுக்குப் பொடி, ஏலப்பொடி, பேரிச்சம்பழம் கலந்து பத்திரப்படுத்தவும்.
உபயோக முறை :
இனிப்பிற்கு பதிலாகவும், உணவாகவும் உட்கொள்ள லாம்.
தீரும் வியாதிகள் :
உடல் உஷ்ணம், உடல் பலஹீனம்.