தேவையான பொருட்கள்:
1. முளை கட்டிய கேப்பை-150 கி
2. கம்பு-250 கி
3. பாசிப்பயிறு-200 கி
4. கொண்டைக்கடலை-200 கி
5. கோதுமை-150 கி
6. முந்திரி-15 கி
7. சாரப்பருப்பு-15 கி
8. பாதாம் பருப்பு- 10 கி
9. பிஸ்தா பருப்பு-20 கி
செய்முறை :
மேற்கண்ட சரக்குகளை உலர்த்தி பொடி செய்து சலித்து பத்திரப்படுத்தவும்.
உபயோக முறைகள் :
வெந்நீருடன் கலந்து ஒரு வேளை உணவாக உட்கொள்ளலாம். நெய், நீருடன் கலந்து உருண்டைகளாக்கி சத்தான சிற்றுண்டியாக உண்ணலாம். தோசை மாவுடன் கலந்து சுவையான தோசையாக வார்த்தும் உண்ணலாம்.
பயன்கள் :
உடல் பலஹீனத்தைப் போக்கி உடலிற்குத் தேவையான சத்தை அளிக்கிறது.