தேவையான பொருட்கள் :
1. சதகுப்பை தீநீர்-500 மி.லி.
2. சோம்பு தீநீர்-300 மி.லி.
3. வளையல் உப்பு-1 கி
4. கிளிசரின்-50 மி.லி.
செய்முறை:
வளையல் உப்பை இடித்து பொடி செய்து சதகுப்பை தீநீர், சோம்பு தீநீரினுடன் கலந்து வடிகட்டி கிளிசரினுடன் சேர்த்துக் கொள்ளவும்.
அளவு :
25 மி.லி. வீதம் தினமும் 2 வேளைகள் உணவிற்கு முன் உட்கொள்ள வேண்டும்.
தீரும் வியாதிகள் :
குழந்தைகளின் அஜீரணம் மற்றும் வயிற்றுக் கோளாறுகள்.