தேவையான பொருட்கள் :
1. ரோஜா தீநீர் -90 கி
2. படிகாரம் -5 கி
3. நேத்திரப்பூண்டு இலை -5 கி
செய்முறை :
நேத்திரப் பூண்டு இலையை சுத்தம் செய்து ரோஜா தீநிரில் போட்டு அதில் படிகாரத்தைக் கரைத்து 10 நாட்களுக்கு சூரிய புடத்தில் வைத்து பின்னர் சுத்தமான மெல்லிய சிறு துளைகளுள்ள துணியினால் வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
அளவு :
பாதிக்கப்பட்ட கண்ணில் 2 சொட்டுகள் விடவும். கண் குவளையில் நீர் ஊற்றி அதில் 5 சொட்டுகள் கண் சொட்டு மருந்தை விட்டு கண்களைக் கழுவலாம்.
தீரும் வியாதிகள்:
கண் எரிச்சல், கண் புரை, சதையடைப்பு போன்ற கண் நோய்கள்.