தேவையான பொருட்கள் :
1. காக்கை கொல்லி விதை-100 கி
2. வசம்பு- 100 கி
3. துளசி-100 கி
4. வேப்பிலை-100 கி
5. பூந்திக் கொட்டை-100 கி
செய்முறை:
மேற்கண்ட சரக்குகளை உலர்த்தி இடித்து பொடித்து சலித்து நன்கு கலந்து கொள்ளவும்.
அளவு:
தேவையான அளவு பேன் கொல்லிப் பொடியை மோர், தயிர், தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும்.
தீரும் வியாதிகள்:
பேன், பொடுகு, ஈறுகள் நீங்கும்.