தேவையான பொருட்கள்:
1. சுத்தி செய்த இரசம்-10 கி
2. சுத்தி செய்த கந்தகம்-10 கி
3. சுத்தி செய்த இரசக் கற்பூரம்-10 கி
4. சுத்தி செய்த தாளகம்-10 கி
5. சுத்தி செய்த காந்தம்-10 கி
6. சுத்தி செய்த துருசு-10 கி
7. சுத்தி செய்த மிருதார் சிங்கி-10 கி
8. சுக்கு-10 கி
9. ஓமம்-10 கி
10. மஞ்சள்-10 கி
11. வாய்விடங்கம்-10 கி
12. வசம்பு-10 கி
13. இலவங்கம்-10 கி
14. பறங்கிப்பட்டை-10 கி
15. சுத்தி செய்த சேராங்கொட்டை --10 கி
16. கடுக்காய்த் தோல்-10 கி
17. கருஞ்சீரகம்-10 கி
18. காட்டுச் சீரகம்-10 கி
19. சிறுதேக்கு-10 கி
20. தாளீச பத்திரி-10 கி
21. உலர் திராட்சை-10 கி
22. திப்பிலி-10 கி
23. அரத்தை-10 கி
24. கோஷ்டம்-10 கி
25. வாலுளுவை அரிசி-10 கி
26. சோம்பு-10 கி
27. ஏலம்-10 கி
28. ஜாதிக்காய்-10 கி
29. மிளகு-10 கி
30. சீரகம்-10 கி
31. கார்போக அரிசி-10 கி
32. மாசிக்காய்-10 கி
33. திப்பிலிக் கட்டை-10 கி
34. பிரப்பன் கிழங்கு-10 கி
35. எட்டிக் கொட்டை-10 கி
36. தேற்றான் விதை-10 கி
37. நீர்முள்ளி வித்து-10 கி
38. எள்ளு-10 கி
39. கொள்ளு-10 கி
40. கொப்பரைத் தேங்காய்-10 கி
41. சிறுசின்னி வேர்-10 கி
42. முட்சங்கன் வேர்-10 கி
43. அமுக்கராக் கிழங்கு-10 கி
44. ஆகாயகருடன் கிழங்கு-10 கி
45. சித்திமூல வேர்ப்பட்டை-10 கி
46. கோழி முட்டை-7 எண்ணம்
47. பனை வெல்லம்-400கி
48. சுத்தி செய்த துத்தம்-10 கி
செய்முறை :
நெ. 1 முதல் 8 வரையுள்ள சரக்குகளைக் கல்வத்திலிட்டு அரைத்து வைக்கவும். நெ. 9 முதல் 46 வரையுள்ள சரக்குகளையும் இடித்துச் சலித்து சூரணத்தையும் பொடித்த சரக்குகளையும் ஒன்று சேர்த்து ஒரு பாத்திரத்திலிட்டு கோழி முட்டைகளை உடைத்து ஊற்றி எல்லாவற்றையும் ஒன்றுபடக் கலந்து உலர்த்தியபின், பனை வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, பாகு செய்து சூரணத்தில் விட்டுக் கிளறி பிறகு உரலிலிட்டு பன்னிரெண்டு மணி நேரம் நன்கு இடித்து மெழுகு பதத்தில் எடுத்து வைக்கவும்.
அளவு :
1/2 - 1 கிராம் பனை வெல்லத்துடன் தினம் இரு வேளைகள் தயிர்சாதம் சாப்பிட்ட பிறகு கொடுக்கவும். 40 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும்.
தீரும் வியாதிகள் :
வெடி சூலை, மேக சூலை, இடிசூலை,புடை சூலை, துடி சூலை, வாத சூலை, கால் குடைச்சல், கரணை, விப்புருதி, கண்ட மாலை, தொழுநோய், விஷநீர்,குறை நோய்.
சிரங்கு, புழுவெட்டு, தடிப்பு, பெண்குறிச்சிலந்தி, ஆண்குறிச் சிலந்தி, மேகம், செங்கிரந்தி,கருங்கிரந்தி, அரிகிரந்தி, படுகிரந்தி, இடி கிரந்தி, புரையோடும் புண், அரைக்கடி, ஆண்குறித்தண்டில் புண், தொடை வாழை, மூட்டு வாழை, முதுகு வாழை, புழு வாழை, விலாவில் வாழை . தமர்க்காயாச் சிலந்தி, மார்புச் சிலந்தி, ஆண்குறிப்புற்று, பெண்குறிப்புற்று, இடிப்புற்று, சுன்னப்புற்று, சிலந்தி, ராஜபிளவை, கண்பிளவை, தடிச்சிலந்தி, புடை சிலந்தி, சதை வளரும் பௌத்திரம், மூலம், பாதச் சக்கரம், நாசிப் பிளவை, மேகம், ஆமை அடி முதலியன.
குறிப்பு : தலை முழுகும் நாளின் போது மருந்து உட்கொள்ளக் கூடாது. பத்தியம் இல்லை. மருந்து செய்த 40 நாட்களுக்குப் பிறகே இதனைப் பயன்படுத்தவும்.