Contact Us

Tips Category View

விட்டோ ஹெர்ப் கேப்சூல்

தேவையான சரக்குகள்:
1. வல்லாரை - 207.5 மி.கி.
2. அதிமதுரம் - 207.5 மி.கி.
3. அன்னபேதி  செந்தூரம் - 207.5 மி.கி.
4. இலவங்கம் - 20.7 மி.கி.
5. சிறு நாகப்பூ - 20.7 மி.கி.
6. ஏலம் - 20.7 மி.கி.
7. மிளகு - 20.7 மி.கி.
8. திப்பிலி - 20.7 மி.கி.
9. சுக்கு - 20.7 மி.கி.
10. அமுக்கரா - 207.5 மி.கி.
11. ஓரிதழ் தாமரை - 20.7 மி.கி.
12. ஜாதிக்காய் - 20.7 மி.கி.
13. தங்க பற்பம் - 2 மி.கி.
14. பூரண சந்திரோதயம் - 2 மி.கி.

தயாரிக்கும் முறை:
அன்னபேதி செந்தூரம், தங்க பற்பம், பூர்ண சந்திரோதயம் தவிர மற்ற சரக்குகளை உலர்த்தி பொடித்து, சலித்து முதலில் குறிப்பிட்ட வகைகளுடன் கலந்து அரைத்து 500 மி.கி. வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.

அளவு:
1 முதல் 2 கேப்சூல் காலை,இரவு பாலில் சாப்பிடவும்.

தீரும் நோய்கள்:
தாது நஷ்டம், நரம்புத் தளர்ச்சி, விரைந்து விந்து வெளியேறுதல், ஆண் தன்மை குறைவு, நரம்புக்கு வலுவூட்டி  இழந்த சக்தியை மீண்டும் இளமை உணர்வுடன் திகழவும் செய்யும்.