தேவையான மருந்துகள்:
1. சூரத்து நிலாவரை-60கி
2. குல்கந்து-80கி
3. கொட்டை திராட்சை-50கி
4. பாதாம் பருப்பு-25கி
5. அதிமதுரம்- 10கி
6. கடுக்காய்ப் பிஞ்சு-25கி
செய்முறை:
நெ. 1, 5, 6 எண்ணுள்ள இம்மூன்று சரக்குகளையும், சூரணித்து சலித்து வைக்கவும். நெ. 2, 3, 4 இம்மூன்றையும் கல்வத்திலிட்டு மை போல் அரைத்து, அத்துடன் சூரணத்தை சேர்த்து நன்கு மெழுகு போல் அரைத்து எடுத்து வைக்கவும்.
அளவு:
6-12 கிராம் வரை படுக்கும் முன் வெந்நீர் அல்லது பாலுடன் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
மலக்கட்டு, பசியின்மை மற்றும் வயிற்று உப்பிசம்.