Contact Us

Tips Category View

குன்மகுடோரி மெழுகு (சித்த வைத்தியத் திரட்டு)

தேவையான பொருட்கள்:
1. இந்துப்பு-30 கி
2. கல்லுப்பு-30 கி
3. சோற்றுப்பு-30 கி
4. பூநீறு-30 கி
5. வளையலுப்பு-30 கி
6. பொரித்த வெங்காரம்-30 கி
7. நவச்சாரம்-30 கி
8. வெடியுப்பு-30 கி
9. சுக்கு-30 கி
10. திப்பிலி-30 கி
11. மிளகு -30 கி
12. ஓமம்-30 கி
13. கிராம்பு-30 கி
14. திப்பிலி வேர்-30 கி
15. கோஷ்டம்-30 கி
16. பெருங்காயம்-30 கி
17. உரித்த வெள்ளைப் பூண்டு-30 கி
18. பனை வெல்லம்-150 கி
19. தேன்-150 கி

செய்முறை :
முதல் பதினாறு சரக்குகளையும் நன்கு சூரணித்து சலித்து வைக்கவும். வெள்ளைப் பூண்டைப் பசுவின் பாலில் புட்டவியல் செய்து பனை வெல்லத்தைப் பாகு வைத்து எல்லாவற்றையும் ஒன்று கூட்டி தேன் சேர்த்து மெழுகுபதமாக அரைத்துக் கொள்ளவும்.

அளவு :
1-2 கிராம் வீதம் தண்ணீருடன் தினமும் இரு வேளைகள் கொடுக்கவும்.

தீரும் வியாதிகள்:
குன்மம், பித்த வாயு, அஜீரணம், மந்தம் மற்றும் பூப்பு காலத்திலுண்டாகும் சூதக வாயுவினால் ஏற்படும் வலி ஆகியன.