தேவையான பொருட்கள் :
1. சுத்தி செய்த சேராங்கொட்டை-300 கி
2. எள்ளு-150 கி
3. தேங்காய்-150 கி
4. பறங்கிப்பட்டை-30 கி
5. அமுக்கரா-30 கி
6. சித்திர மூல வேர்ப்பட்டை-30 கி
7. கஸ்தூரி மஞ்சள்-30 கி
8. கருஞ்சீரகம்-30 கி
9. வாலுளுவை அரிசி-30 கி
10. குரோசானி ஓமம்-30 கி
11. வெற்றிலைக் காம்பு-30 கி
12. கடுக்காய்த் தோல்-30 கி
13. திப்பிலி-30 கி
14. கோஷ்டம்-30 கி
15. சுத்தி செய்த ரசக் கற்பூரம்-15 கி
16. பனைவெல்லம்-150 கி
செய்முறை :
முதல் மூன்று சரக்குகளை உரலிலிட்டு இடித்து பின் அதனுடன் மற்ற சரக்குகளை இடித்து, சலித்து கற்பூரத்தைத் தூள் செய்து சேர்த்து கடைசியில் பனைவெல்லத்தையும் கலந்து எல்லாவற்றையும் மெழுகு போல அரைத்துக் கொள்ளவும்.
அளவு :
200-500 மி.கி. வீதம் தினமும் 2 வேளைகள் பனை வெல்லத்துடன் 40 நாட்கள் உட்கொள்ள வேண்டும். உணவில் மீன், உப்பு தவிர்க்க வேண்டும். விளக்கெண் ணெய்யைத் தேய்த்து தலை முழுக வேண்டும்.
தீரும் வியாதிகள் :
வாயுத் தொல்லை, தொழு நோய், படை, கருமேகம், அக்னி, 8 வகை குன்மம், விரணம், அனைத்து வாத நோய்கள், சூதக சூலை, அரையாப்பு, வெள்ளை கிரந்தி, சூலை முதலியன.
குறிப்பு: மேற்கண்ட மருந்தைத் தயாரித்த 3 மாதங்களுக்குப் பிறகுதான் உபயோகிக்க வேண்டும்.