தேவையான பொருட்கள்:
1. சுத்தி செய்த இரசம்-10 கி
2. சுத்தி செய்த கந்தகம்-10 கி
3. சுத்தி செய்த இருவி-10 கி
4. சுத்தி செய்த கருநாபி-10 கி
5. சுத்தி செய்த மனோசிலை-10 கி
6. பொரித்த வெங்காரம்-10 கி
7. சுக்கு-10 கி
8. மிளகு-10 கி
9. திப்பிலி-10 கி
செய்முறை :
முதலில் இரசம், கந்தகம் இவ்விரண்டையும் கல்வத்தி லிட்டு கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன் தனித்தனியே பொடித்துப் பிறகு ஒன்று சேர்த்து மற்ற சரக்குகளின் சூரணத்தைச் சிறிது சிறிதாகச் சேர்த்து ஏழு நாட்கள் வரை கருப்பு நிறம் அடையும் வரை நன்கு அரைத்து வைக்கவும்.
அளவும் அனுபவமும் :
200-400 மி.கி. வீதம் தக்க அனுபானத்துடன் தேன், இஞ்சிச் சாறு, தாய்ப்பால் ஆகியவற்றுடன் 2-3 வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
80 வகை வாதம், 40 வகை பித்தம், 20 வகை கபம், 5 வகை சுவாசம் (இரைப்பிருமல்) குஷ்டம்,குன்மம்,சன்னி மூலம், சயம், மகோதரம் முதலியன.
அரணைக்கடி, குமரகண்ட வலி, தேள்கடி இவற்றிற்கு நஸ்யமாக உபயோகிக்கவும்.
குறிப்பு : இந்த மருந்தை இருவியைச் சேர்க்காமலும் செய்வதுண்டு. இருவி சேர்ந்த மருந்தை சாப்பிடும் போது உப்பு புளி நீக்கவும்.