தேவையான பொருட்கள் :
1. கஸ்தூரி-5 கி
2. பச்சைக் கற்பூரம்-25 கி
3. கோரோசனை-25 கி
4. குங்குமப்பூ-25 கி
5. திப்பிலி-25 கி
6. 6.ஓமம்-25 கி
7. இரசம்-25 கி
8. கந்தகம்-25 கி
9. லிங்கம்.-25 கி
10. பூரம்-25 கி
11. இரசச் செந்தூரம்-25 கி
12. தாளகம்-25 கி
13. மனோசிலை-25 கி
செய்முறை :
1 முதல் 4 வரையிலான சரக்கினைப் பொடித்து பத்திரப் படுத்தவும். 5-6 வரை உள்ளவற்றைப் பொன்வறுவலாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் ரசம், கந்தகம் இரண்டையும் கல்வத்திலிட்டு, கஜ்ஜளி செய்து கொண்டு, அத்துடன் லிங்கம், பூரம், இசரச்செந்தூரம், தாளகம், மனோசிலை இவற்றைத் தனித்தனியே பொடித்து அரைக்கவும். பின்பு முதலில் பொடித்த கலவையைக் கலந்து அரைத்து, காற்றுப்புகாத குப்பியில் அடைத்து வைக்கவும்.
அளவு :
50-100 மி.கி வீதம் 2-3 வேளைகள் தேன் அல்லது பால் இஞ்சி சாறுடன் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
வாதம், கபம், சுரம், இருமல், இரைப்பு, தொண்டைக்கட்டு ஆகிய நோய்கள் தீரும்.