தேவையான பொருட்கள் :
1. குங்கிலியம்-175 கி
2. நல்லெண்ணெய்-350 கி
செய்முறை :
குங்கிலியத்தை நல்லெண்ணெயிலிட்டு காய்ச்சும் போது குங்கிலியம் உருகி எண்ணெயில் கலந்து விடும். உடனே அக்கலவையைத் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் கொட்டி மத்தினால் கடைய, வெண்ணெய் போல் குங்கிலியம் தண்ணீரில் மிதக்கும். இந்த வெண்ணெயை எடுத்து வாயகன்ற ஜாடியில் உள்ள தண்ணீரில் இட்டு பத்திரப்படுத்தவும்.
அளவு :
3-6 கிராம் வீதம் எலரசிப் பொடியுடன்தினம் இரு வேளை கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
மேக வெள்ளை, நீர்க்கடுப்பு, உட்காங்கை, வயிற்றெரிச்சல், மேக விரணம், கீழ்ப்பிடிப்பு, காசம், முக எரிவு, கை கால் காந்தல் போன்ற நோய்கள் குணமாகும்.