தேவையான பொருட்கள்:
1. துருஞ்சி பழச்சாறு-1 கி.கி.
2. சர்க்கரை-2 கி.கி.
செய்முறை :
இரண்டையும் ஒன்று சேர்த்துக் காய்ச்சி பாகு பதத்தில் எடுத்து வைக்கவும்.
அளவு :
1-2 தேக்கரண்டி வீதம் இரு மடங்கு தண்ணீருடன் தினம் 2-3 வேளைகள்.
தீரும் நோய்கள் :
பித்தம், பித்த நோய்கள், வாந்தி, பித்த அஜீரணம் ஆகியன தீரும்.
வெண்ணெய்கள் தயாரிப்பு முறைகள்
வெண்ணெய் போன்ற தோற்றமும் குழகுழப்புத் தன்மையும் கொண்ட மருந்து வகைகளுக்கு வெண்ணெய் என்று பெயர்.
1. வெண்ணெயுடன் மற்ற மருந்துச் சரக்குகளைச் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளப்படும் மருந்து வகைகளும்.
2. பிசின் போன்ற மருந்துச் சரக்குகளை எண்ணெய் வகைகளுடனோ பசு நெய்யுடனோ சேர்த்து உறவுபடக் காய்ச்சி தண்ணீருள்ள மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி மத்திட்டு கடைந்து எடுத்துக் கொள்ளப்படும் மருந்து வகைகளும்.
3. செயல்முறையில் குறிப்பிட்டுள்ள தனி மருந்து சரக்கையோ அல்லது பல மருந்துச் சரக்குகளையேர் வொண்ணெய்யுடன் சேர்த்து பக்குவப்படுத்தி எடுத்துக் கொண்ட மருந்து வகைகளும் ஆகியன அனைத்தும் வெண்ணெய் என்றே கூறப்படும்.