தேவையான பொருட்கள்:
1. சந்தனப்பொடி-20 கி
2. மிளகுப் பொடி-15 கி
3. வெள்ளை மிளகுப் பொடி-15 கி
4. கருவேலம் பிசின்-10 கி
5. பூனைக் குங்குலியம்-10 கி
6. பன்னீர்-10 மி. லி.
7. சந்தனத் தைலம்-10 மி. லி.
செய்முறை:
மேற்கண்ட சரக்குகளை சுத்தம் செய்து இடித்து, பொடித்து சலித்து பன்னீரில் கலந்து இறுதியில் சந்தனத் தைலத்துடன் கலந்து 500 மி.லி. மாத்திரைகளாக உருட்டவும்.
அளவு :
2-4 மாத்திரைகள் வீதம் தினமும் 2 வேளைகள் தேன் அல்லது நீருடன் உட்கொள்ளவும்.
தீரும் நோய்கள் :
நீர்க்கடுப்பு, உடல் உஷ்ணம், பயணச்சூடு, சிறுநீரகக் கற்கள், தாக வறட்சி நீங்கி உடல் குளிர்ச்சி உண்டாகும்.