தேவையான பொருட்கள் :
1. ஏலம்-500 மி.கி.
2. கந்தகம்-500 மி.கி.
3. அப்பிரக பற்பம்-500 மி.கி.
4. தாமிர பற்பம்-500 மி.கி.
5. சீந்தில்சாறு-500 மி.கி.
6. துளசிச்சாறு-100 மி.கி.
7. நெல்லிக்காய் சாறு-100 மி.கி.
8. கடுக்காய்-100 மி.கி.
9. தான்றிக்காய்-100 மி.கி.
10. சாரணைச்சாறு-100 மி.கி.
11. சுத்தி செய்த காந்தம்-500 மி.கி.
12. சுத்தி ரசம்-500 மி.கி.
13. சித்திர மூல வேர்ப்பட்டை குடிநீர் - தேவையான அளவு
தயாரிக்கும் விதம் :
1-4 வரையுள்ள சரக்கினை சுத்திகரித்து கல்வத்திலிட்டு பொடித்து தனித்தனியே வெள்ளைச் சாரணை சாற்றாலும், சீந்தில் குடிநீரினாலும் முறையே 6 மணி நேரம் அரைத்து ஒரே உருண்டையாக உருட்டி சாரணை இலை கற்கத்தின் நடுவில் வைத்து இலை கருகும்படி ஒரு இலகுபுடம் போட்டு ஆறவிட்டு எடுத்து சித்தி மூல வேர்ப்பட்டை குடிநீரினால் 12 மணி நேரம் அரைத்து 100 மி.கி. அளவாக மாத்திரைகள் உருட்டி நிழலில் உலர்த்தவும்.
அளவு:
1-2 மாத்திரைகள் தண்ணீருடன் அருந்தவும்.
தீரும் நோய்கள் :
ஜன்னி, வாதம் முதலியன தீரும்.