தேவையான பொருட்கள் :
1. சுத்தி செய்த லிங்கம்-25 கி
2. பொரித்த வெங்காரம்-25 கி
3. சுத்தி செய்த கந்தகம்-25 கி
4. திப்பிலி-25 கி
5. கோஷ்டம்-25 கி
6. அக்கரகாரம்-25 கி
7. அதிமதுரம்-25 கி
8. கோரோசனை-10 கி
9. குங்குமப்பூ-10 கி
10. பச்சை கற்பூரம்-10 கி
11. லவங்கம்-10 கி
செய்முறை :
சுத்தி செய்த லிங்கம், பொரித்த வெங்காரம், சுத்தி செய்த கந்தகம், திப்பிலி, கோஷ்டம் போன்ற அனைத்து சரக்கினையும் முறைப்படி கல்வத்திலிட்டு பொடித்து இஞ்சிச் சாற்றினால் இரண்டு நாட்களும் பசும்பாலால் இரண்டு நாட்களும் நன்கு அரைத்து 100 மி.கி. மாத்திரைகளாக உருட்டி வைக்கவும்.
அளவு :
2-5 மாத்திரைகள் வீதம் தினம் இரு வேளைக்கு தேன், இஞ்சிச் சாறு அல்லது பசும்பாலுடன் கொடுக்கவும்.
தீரும் வியாதிகள்:
நாட்பட்ட சுரங்கள், கபகாசம், தாகம், தும்மல், ஏப்பம், சிறுநீர் நோய்கள் முதலியவை நீங்கும்.