தேவையான பொருட்கள் :
1. பொரித்த வெங்காரம்-100 கி
2. சுக்கு-100 கி
3. மிளகு-100 கி
4. திப்பிலி-100 கி
5. இந்துப்பு-100 கி
6. சுத்தி செய்த நேர்வாளம்-100 கி
7. சுத்தி செய்த காந்தம்-100 கி
8. பெருங்காயம்-100 கி
9. கழற்சிப்பருப்பு-100 கி
செய்முறை :
அனைத்தையும் எடுத்துப் பொடித்து கல்வத்திலிட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து உருண்டை செய்து மேல்மூடி இட்டு சீலை செய்து குக்குட புடமிட்டெடுத்து ஆறிய பிறகு மருந்தைக் கல்வத்திலிட்டு கடுக்காய் கியாழத்தால் நன்கு அரைத்து 500 மி.கி. மாத்திரைகளாக உருட்டி வைக்கவும்.
அளவு:
1-2 மாத்திரைகள் இரு வேளைகள் சாப்பிடவும்.
தீரும் நோய்கள் :
விளக்கெண்ணெயில் சேர்த்துக்கொடுக்க பேதியாகும். தண்ணீரில் கலந்து கொடுக்க குன்மம், சூலை, அண்டவாதம், பாண்டு, மகோதரம் இவை தீரும்.