Contact Us

Tips Category View

நீர்க்கோவை மாத்திரை (சித்த வைத்தியத் திரட்டு)

தேவையான பொருட்கள் :
1. கம்பு மஞ்சள்-40 கி
2. கஸ்தூரி மஞ்சள்-40 கி
3. பொரித்த வெங்காரம்-40 கி
4. சாம்பிராணி-20 கி
5. மிளகு-20 கி
6. சுக்கு-20 கி
7. ஜாதிக்காய்-20 கி
8. ஓமம்-20 கி
9. இலவங்கம்-20 கி
10. கற்பூரம்-20 கி
11. எலுமிச்சம்பழச்சாறு-தேவையான அளவு

செய்முறை :
எல்லா சரக்குகளையும் சூரணித்து கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழச்சாற்றினால் 6 மணி நேரமோ அல்லது பழச்சாறு வற்றும் வரையோ அரைத்து 500 மி.கி. மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி வைக்கவும்.

அளவு / தீரும் நோய்கள் :
வெளி உபயோகமாக இதனைத் தண்ணீரில் இழைத்து நெற்றியில் பற்று போடத் தலைவலி, தலையில் நீரேற்றம், ஜலதோஷம் ஆகியவை நீங்கும்.