Contact Us

Tips Category View

முருக்கன் விதை மாத்திரை (சித்த வைத்தியத் திரட்டு)

தேவையான பொருட்கள் :
1. சுக்கு-10 கி
2. மிளகு-10 கி
3. திப்பிலி-10 கி
4. கடுகு ரோஹினி-10 கி
5. முருக்கன் விதை-10 கி
6. சீரகம்-10 கி
7. சுத்தி செய்த நேர்வாளம்-60 கி

செய்முறை :
மேற்படி சரக்குகளைப் பொடித்து கல்வத்திலிட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து 500 மி.கி. மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி வைக்கவும்.

அளவு : 
1 முதல் 2 மாத்திரைகள் வீதம் படுக்கும் முன் தண்ணீரும், சர்க்கரையும் அல்லது பனை வெல்லமும் சேர்த்துக் கொடுக்கவும்.

தீரும் வியாதிகள்:
குடற்புண்கள், மாந்தம், வயிறு உப்புசம், கபக்கட்டு, சீதக்கட்டு முதலியன குணமாகும்.