Contact Us

Tips Category View

மகா ஏலாதி குளிகை (அகஸ்தியர் வைத்திய காவியம்)

தேவையான பொருட்கள் :
1. ஏலம்-10 கி
2. இலவங்கம்-10 கி
3. வால்மிளகு-10 கி
4. சந்தனம்-10 கி
5. வெட்டிவேர்-10 கி
6. விலாமிச்சம்வேர்-10 கி
7. அகில்கட்டை-10 கி
8. தாமரை மகரந்தம்-10 கி
9. தாமரைவளையம்-10 கி
10. அதிமதுரம்-10 கி
11. அக்கரகாரம்-10 கி
12. நாட்டு அமுக்கரா-10 கி
13. குங்குமப்பூ-10 கி
14. பச்சை கற்பூரம்-10 கி
15. கஸ்தூரி-10 கி
16. மான் கொம்பு-10 கி
17. சடாமாஞ்சில்-10 கி
18. உருத்திராட்சம்-10 கி
19. கோரோசனை-10 கி
20. அம்பர்-10 கி
21. சாம்பிராணிப் பூ-10 கி
22. அப்பிரகப் பற்பம்-10 கி
23. வெள்ளி பற்பம்-10 கி
24. முத்து பற்பம்-5 கி
25. பவள பற்பம்-5 கி
26. மாதுளம் பழச்சாறு-தேவையான அளவு
27. இளநீர்-தேவையான அளவு
28. ஆவின் பால்-தேவையான அளவு

செய்முறை :
தூய்மை செய்ய வேண்டிய சரக்குகளைத் தூய்மை செய்து கொண்டு கடினமான சரக்குகளைத் தனித்தனியே பொடித்துச் சேர்த்து கல்வத்திலிட வேண்டும்.
மாதுளம் பழச்சாறு, இளநீர் மற்றும் ஆவின்பால் ஒவ்வொன்றிலும் 24 மணி நேரமும் அரைத்து 50 மி.கி. மாத்திரைகளாக உருட்டி பத்திரப்படுத்தவும். நிழலில் உலர்த்தி

அளவு : 
1-2 மாத்திரைகள் வீதம் இரு வேளைக்கு 45 நாட்கள் இளநீர் அல்லது பாலும் சர்க்கரையும் அல்லது தேன் அல்லது பழ ரசத்துடன் சேர்த்துக் கொடுக்கவும்.

தீரும் வியாதிகள்:
கண் நோய், கண் காசம், காமாலை, பாண்டு,சோகை, கல்லடைப்பு, கடுங்காய்ச்சல், தொண்டைக்கட்டு, நீரிழிவு, கசப்புடன் கூடிய வாந்தி ஆகியன குணமாகும். ஆறுவாரங்கள் தொடர்ந்து உட்கொண்டால் முக அழகு, நல்லதொனி, நீண்ட ஆயுள் ஆகியன உண்டாகும்.