தேவையான சரக்குகள்:
1. சிற்றாமுட்டி - 100 மி. கி.
2. அமுக்கரா - 200 மி. கி.
3. கொடிவேலி - 150 மி. கி.
4. திரிகடுகு - 100 மி. கி.
5. நொச்சி - 400 மி. கி.
6. காந்த செந்தூரம் - 50 மி. கி.
தயாரிக்கும் முறை:
1-5 வரையுள்ள மூலிகைகளை நிழலில் உலர்த்தி பொடித்து, சலித்து இத்துடன் காந்த செந்தூரம் சேர்த்து இடைவிடாது நன்றாக கல்வத்தில் அரைத்து 500 மி. கி. வீதம் ஒவ்வொரு கேப்சூல்களிலும் நிரப்பி பத்திரப்படுத்தவும்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினம் 2முதல்3 வேளைகள் வெந்நீரில் சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
எல்லா வகையான வாத ரோகங்கள், மூட்டு வலி, வீக்கம், இடுப்பு வலி, நரம்பு வலி, தசை வலி எல்லா வகையான நீர்க்கட்டுகள்.