Contact Us

Tips Category View

மேகநாத குளிகை (அகஸ்தியர் சில்லரை கோவை)

தேவையான பொருட்கள்:
1. சுத்தி செய்த லிங்கம்-30 கி
2. கருஞ்சிவதை வேர்-30 கி
3. வசம்பு-30 கி
4. சுக்கு-30 கி
5. இந்துப்பு-30 கி
6. வாய்விடங்கம்-30 கி
7. ஓமம்-30 கி
8. பொரித்த பெருங்காயம்-30 கி
9. வெள்ளை காட்டாமணக்கு வேர்ப்பட்டை-30 கி
10. எலுமிச்சம்பழச்சாறு-தேவையான அளவு
11. நேர்வாளம்-30 கி
12. வெங்காரம்-30 கி

செய்முறை :
1 -9 வரையுள்ள சரக்குகளை எடுத்துத் தனித்தனியே பொடித்துச் சேர்த்துக் கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழச்சாற்றினால் நன்கு அரைக்கவும். பின்பு அதனுடன் சுத்தி செய்த நேர்வாளத்தை சேர்த்து அரைத்து மாத்திரை செய்யக் கூடிய பதத்தில் 100 மி.கி. மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி வைக்கவும்.

அளவு : 
2 - 4 மாத்திரைகள் வீதம் சுக்கு கியாழத்துடன் இரு வேளைகள் கொடுக்க குளிர் சுரம், வாயு, பித்த நீர், பாண்டு சோகை, வயிற்று வலி, செரியாமை, மலபந்தத்துடன் கூடிய சுரத்தில் உண்டாகும் மலக்கட்டு நீங்கி நோய் தணியும்.