தேவையான பொருட்கள் :
1. குங்குமப் பூ-100 கி (கியாழத்திற்கு)
2. சுக்கு-100 கி
3. வெண் மிளகு-100 கி
4. வால் மிளகு-100 கி
5. கோஷ்டம்-100 கி
6. ஓமம்-100 கி
7. சுத்தி செய்த லிங்கம்-100 கி
8. கோரோசனை-100 கி
9. திப்பிலி-100 கி
10. இலவங்கம்-100 கி
11. ஏலம்-100 கி
12. வெங்காரம்-100 கி
13. குங்குமப்பூ-100 கி
14. சாம்பிராணி பூ-100
செய்முறை :
அனைத்தையும் கல்வத்திலிட்டு பொடித்து குங்குமப்பூ கியாழத்தில் மூன்று மணி நேரம் நன்கு அரைத்து 50 மி.கி. மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி பயன்படுத்தவும்.
அளவு :
1 - 2 மாத்திரைகள் தேனுடன் இரு வேளை கொடுக்கவும்.
தீரும் வியாதிகள்:
நீர்க்கோவை, ஜலதோஷம், நாட்பட்ட மலக்கட்டு, அதிக வியர்வை ஆகியவை தீரும்.