Contact Us

Tips Category View

பால சஞ்சீவி மாத்திரை (அகஸ்தியர் பால வாகடம்)

தேவையான பொருட்கள் :
1. சுக்கு-10 கி
2. மிளகு-10 கி
3. திப்பிலி-10 கி
4. பொரித்த வெங்காரம்-10 கி
5. சுத்தி செய்த லிங்கம்-10 கி
6. எலுமிச்சம்பழச்சாறு-தேவையான அளவு

செய்முறை :
அனைத்து சரக்குகளையும் எலுமிச்சம்பழச்சாறில் மூன்று மணி நேரம் நன்கு அரைத்துப் பதத்தில் 700 மி.கி. மாத்திரையாக உருட்டி உலர்த்தி பத்திரப்படுத்தவும்.

அளவு: 
மாசி பத்திரி பட்டவியல் சாற்றுடன் திரிகடுகு சூரணம் 1 முதல் 2 கிராம் அத்துடன் ஒரு மாத்திரையும் கலந்து கொடுக்கவும்.

தீரும் வியாதிகள் :
மந்தம், கணம், வயிற்றோட்டம், பித்தம்,வாந்தி, இருமல் இவை தீரும்.
கோரோசனையுடன் சேர்த்துக் கொடுக்க சுரம், இருமல் தீரும். சாதிக்காய், புளியங்கொட்டைத் தோல் பொடியுடன் சேர்த்துக் கொடுக்க மூலம் தீரும்.