தேவையான பொருட்கள் :
1. தங்கரேக்-10 கி
2. கந்தகம்-160 கி
3. செம்பருத்திச்சாறு-தேவையான அளவு
4. வாழைக்கிழங்கு சாறு-தேவையான அளவு
செய்முறை :
தங்க ரேக்கை இரசத்தில் தொந்திக்கச் செய்து நன்கு கலந்த பிறகு அத்துடன் கந்தகத்தைச் சேர்த்து நன்கு அரைத்து கஜ்ஜிளி செய்து வைக்கவும். பிறகு இதைக் கல்வத்திலிட்டு செம்பருத்திப் பூச்சாற்றால் இரண்டு நாட்களும், வாழைக்கிழங்கு சாற்றால் இரண்டு நாட்களும் அரைத்து உலர்ந்த பின் தூள் செய்து முறைப்படி சீலை செய்த காசிக் குப்பியில் அடைத்து, மணல் சட்டியில் வைத்து முத்தீயால் மூன்று நாட்கள் விடாமல் எரித்து ஆறிய பின்னர் செந்தூரத்தை எடுத்து அரைத்து வைக்கவும்.
அளவு:
100-200 மி.கி. வரை தேன் அல்லது கற்பூராதிச் சூரணம் அல்லது வெற்றிலைச்சாறு சேர்த்து தினமும் இருவேளை கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
மலச்சிக்கல், எலிக்கடி, பித்தம், கபம், காமாலை, குடைச்சல்,கெட்ட சதை வளர்தல் ஆகிய நோய்கள் தீரும்.