Contact Us

Tips Category View

படிக லிங்கச் செந்தூரம் (சித்த வைத்தியத் திரட்டு)

தேவையான பொருட்கள் :
1. படிகாரம்-80 கி
2. சுத்தி செய்த லிங்கம்-10 கி
3. கடுக்காய்ப் பூ-10 கி
4. காட்டத்திப் பூ-30 கி

செய்முறை :
படிகாரம், லிங்கம் இரண்டையும் தனித்தனியே பொடித்து ஒன்று சேர்த்து கல்வத்திலிட்டு ஒரு லிட்டர் தண்ணீரில் கடுக்காய்ப் பூ மற்றும் காட்டத்திப்பூ போட்டு 125 மி.லி. ஆக சுண்ட வைத்து வடிகட்டிய கியாழத்தால் இரண்டு நாட்கள் வரை நன்கு அரைத்து நிழலில் உலர்த்தி பொடித்து வைக்கவும்.

அளவு : 
1/2 முதல் 1 கிராம் வரை தினமும் இரு வேளைக்கு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கொடுக்கவும்.

தீரும் நோய்கள் :
அதிசாரம், சீதபேதி, பெரும்பாடு நோய்கள் விலகும்.