Contact Us

Tips Category View

லிங்கச் செந்தூரம் நெ. 2 (சித்தி வைத்தியத் திரட்டு)

தேவையான பொருட்கள்:
1. சுத்தி செய்த லிங்கம்-30 கி
2. சாம்பிராணி-210 கி
3. கற்பூரம்-210 கி
4. மஞ்சணத்திப்பட்டை சூரணம்- தேவையான அளவு.

செய்முறை :
சாம்பிராணி மற்றும் கற்பூரம் இரண்டையும் நன்கு அரைத்து மெழுகு பதத்தில் எடுத்து அதனை ஒரு நீல நிறத் துணியில் தடவி லிங்கக் கட்டிக்குச் சுற்றி எரிக்கவும். எரிந்து கருகி சீலையை நீக்கி விட்டு ஆறிய பிறகு மறுபடியும் இவ்விதமாக 5- 7 முறை மேற்படி மெழுகை துணியில் தடவி லிங்கக் கட்டிக்குச் சுற்றி எரித்து ஆறிய பின் கழுவி உலர்த்தவும். பின்னர் ஒரு அகலில் லிங்கத்தை வைத்து நுணாப்பட்டைச் சூரணம் கொண்டு கீழும் மேலுமாக வைத்து மூடி சீலை செய்து 5 வரட்டிகளைக் கொண்டு புடமிட்டெடுக்கவும். வில்லைகளைக் கல்வத்திலிட்டு அரைத்து வைக்கவும்.

அளவு :
50-100 மி.கி. வரை தேன் அல்லது அனுபானங்களுடன் தினம் இருவேளைகள் கொடுக்க தோல் நோய்கள் வாத, கப நோய்கள், குளிர்சுரம் எல்லாத விதமான சுரம் ஆகியவை தீரும்.