Contact Us

Tips Category View

கௌரி சிந்தாமணி செந்தூரம் (அகஸ்தியர் வைத்திய காவியம் -1500)

தேவையான பொருட்கள்:
1. சுத்தி செய்த இரசம்-30 கி
2. சுத்தி செய்த கந்தகம்-30 கி
3. பொரித்த வெங்காரம்-20 கி

செய்முறை :
முதலில் கந்தகத்தைக் கல்வத்திலிட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு இரசத்தைச் சிறிது சிறிதாக சேர்த்து எல்லா மருந்தும் கருப்பாகும் வரை அரைத்துப் பொரித்து வெங்காரத்தைச் சேர்க்கவும். அரைத்து கெட்டியான துணியில் பாக்களவு, உருண்டையான மூட்டைகள் கட்டி சீலை செய்து மண் சட்டியில் பரப்பியுள்ள மணலுக்குள் வரிசையாக வைத்து மூடி 10 வரட்டிகளை மேலே வைத்துப் புடமிட்டு எடுத்து ஆற வைக்கவும். பிறகு மேல் கவசம் நீக்கி மருந்தை எடுத்து நன்கு அரைத்து வைக்கவும். மருந்து பூலாம்பழம் போன்று கருப்பாயிருக்கும்.

அளவு : 
100- 200 மி.கி. வீதம் இரு வேளைகளுக்கு நாற்பது நாட்கள் வரை தேன், திரிகடுகு சூரணத்துடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள் :
திரிகடுகு சூர்ணமும், தேனும் சேர்த்துக் குழைத்துக் கொடுக்க சூலை-18, வாயு 26,குன்மம் - 16, குடலிளைப்பு நோய் (உளை மாந்தம்) தீராச் சுரங்கள், எலிக்கடி, மாந்தாரகாசம், ஈளை இருமல், எலும்புருக்கி, காசசுவாசம், சுரமாந்தை, எருவாய் மூலம், அரையாப்பு, காமாலை, ஆண்குறிச்சூலை, பெண்குறிச்சூலை, விரைவாதம், தொடை வாழை, பத்து வகை, விப்புருதி முதலியவை குணமாகும்.