Contact Us

Tips Category View

சண்ட மாருத செந்தூரம் (சித்த வைத்தியத் திரட்டு)

தேவையான பொருட்கள்:
1. சுத்தி செய்த லிங்கம்-10 கி
2. சுத்தி செய்த பூரம்-20 கி
3. சுத்தி செய்த வீரம்-10 கி
4. சுத்தி செய்த கந்தகம்-10 கி
5. சுத்தி செய்த இரச செந்தூரம்-10 கி

செய்முறை :
சுத்தி செய்த பொருட்களைக் கல்வத்திலிட்டு பொடித்து முட்டையின் வெண்கரு விடடு 5 நாள் வரை நன்கு அரைத்து பின் பால் சேர்க்காமல் விழுது போன்று இருக்கும் மருந்து பொடியாகும் வரை அரைத்து எடுக்கவும். முதலில் கந்தகம் பின்னர் வீரம் மூன்றாவதாய் பூரம், நான்காவதாய் இரசச் செந்தூரம், இறுதியில் லிங்கம் என்ற வரிசைப்படி சேர்த்து அரைத்து பவள நிறம் வரும் வரை அரைக்கவும்.

அளவு : 
50- 100 மி.கி. வரை தேன், இஞ்சிச்சாறு, பனை வெல்லம், திரிகடுகு, சூரணம் சேர்த்து தினம் இரு வேளைகள் வீதம் குறைந்தது 5 நாட்களுக்குக் கொடுக்கவும்.

தீரும் நோய்கள் :
சகலவித பாண்டு ரோகங்களும் மற்றும் நீராம்பல் தீரும்.