தேவையான பொருட்கள் :
1. சுத்தி செய்த கந்தகம்-90 கி
2. சுத்தி செய்த காந்தம்-70 கி
3. அயப்பொடி-120 கி
4. இந்துப்பு-40 கி
5. வெங்காரம்-80 கி
6. இரசம்-50 கி
7. கற்றாழைச் சாறு-தேவையான அளவு.
செய்முறை:
இரசத்துடன் கந்தகத்தைச் சேர்த்து அரைத்து அத்துடன் மற்ற சரக்குகளையும் சேர்த்து கற்றாழைச் சாற்றை விட்டு நன்றாக உறவாகும்படி 5 நாள் வரை அரைத்து வில்லை தட்டி நன்றாகக் காய வைக்கவும். பின்னர் அதனை வாய் அகன்ற சட்டியில் வைத்து வாய் பொருத்தமான மற்றொரு சட்டியில் மூடி ஏழு சீலை மண்வன்மையாய் செய்து 24 மணி நேரம் அடுப்பிலிட்டு எரித்து ஆறிய பின் எடுத்துப் பார்க்க செந்தூரம் மாதுளம் பூ நிறம் பெற்றிருக்கும். இதனைப் பொடித்துக் குப்பியில் அடைக்கவும்.
அளவு :
100 -200 மி.கி. வரை தேன், திரிகடுகு சூரணம் சேர்த்து தினம் இரு வேளைக்குக் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
வெளுப்பு, கிரந்தி, குடல் வாதம், தொண்டை வலி, மூலம், கண்டமாலை, வறட்சி, சூலை ஆகியன குணமாகும்.