தேவையான பொருட்கள்:
1. சுத்தி செய்த இரும்புத்தூள் - 100 கி
2. சுத்தி செய்த கந்தகம்-100 கி
3. சுத்தி செய்த லிங்கம்-100 கி
4. மஞ்சள் கரிசாலைச் சாறு தேவையான அளவு
5. வெடியுப்பு திராவகம்-தேவையான அளவு
செய்முறை :
முதல் மூன்று சரக்குகளைக் கல்வத்திலிட்டு நன்கு பொடித்து பின்னர் தயார் செய்த வெடியுப்பு திராவகம் கொண்டும் மஞ்சள் கரிசாலை சாறு கொண்டும் தனித்தனியே நன்கு அரைத்துப் பொருத்தமான அகல் கொண்டு மேற்கூறிய எரிப்புச் சட்டியை மூடி சீலை செய்து உலர்ந்த பின் அடுப்பிலேற்றி 12 மணி நேரம் தீபாக்கினி, கமலாக்கினிகளால் அடுத்த 12 மணி நேரம் கமலாக்கினி, காடாக்னியினாலும் அடுத்த 12 மணி நேரம் தொடர்ந்து காடாக்கினியாலும் எரிக்கவும். பிறகு குளிர்ந்த கலன்களைப் பிடித்து அதனுள் அகலில் பதங்கியிருக்கும் பதங்கத்தையும் அடியில் தங்கியுள்ள செந்தூரத்தையும் தனித்தெடுத்து செந்தூரத்தை மட்டும் நன்கு பொடித்து உபயோகிக்கவும்.
அளவு :
100 - 200 மி.கி. வரை தேன் அல்லது நெய்யுடன் தினமும் இருவேளை கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
சகலவித பாண்டு ரோகங்களும் மற்றும் நீராம்பல் தீரும்.