தேவையான பொருட்கள் :
1. சுத்தி செய்த அயம்-80 கி
2. சுத்தி செய்த கந்தகம்-80 கி
3. சுத்தி செய்த காந்தம்-20 கி
4. சுத்தி செய்த லிங்கம்-10 கி
5. சுத்தி செய்த வெங்காரம்-10 கி
6. சுத்தி செய்த படிகாரம்-10 கி
7. சுத்தி செய்த பூநீறு-10 கி
8. சுத்தி செய்த சோற்றுப்பு-10 கி
9. சுத்தி செய்த இந்துப்பு-10 கி
10. சுத்தி செய்த நவச்சாரம்-10 கி
11. சுத்தி செய்த கற்பூரம்-10 கி
12. எலுமிச்சம்பழச் சாறு-தேவையான அளவு
செய்முறை:
மேற்கண்ட சரக்குகளை நன்கு பொடித்து அரைத்து ஒன்று சேர்ந்து கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழச் சாற்றில் இரண்டு நாட்கள் அரைத்து வில்லைகளாகத் தட்டி உலர்ந்த பின் 100 வரட்டிகளில் புடமிடவும். செந்தூரம் சிவப்பு நிறமாக இருக்க வேண்டும். செந்தூரத்தில் நிறம் சிவப்பாக அமையாவிடின் மற்றொரு முறை புடமிடச் செந்தூரமாகும்.
அளவு:
100- 20 மி.கி. வரை தேனுடனோ, நெய்யுடனோ அல்லது பஞ்ச தீபாக்கினிச் சூரணத்துடன் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
எல்லா வகையான பாண்டு நோய்களும் குணமாகும்.