Contact Us

Tips Category View

அன்னபேதி செந்தூரம் நெ. 2 (சித்த வைத்தியத் திரட்டு)

தேவையான பொருட்கள்:
1. சுத்தி செய்த அன்னபேதி-40 கி
2. சுத்தி செய்த வெடியுப்பு-40 கி
3. எலுமிச்சம்பழச்சாறு-தேவையான அளவு

செய்முறை:
முதல் இரண்டு சரக்குகளைக் கலந்து கல்வத்தி லிட்டு எலுமிச்சாம்பழச்சாற்றினால் நன்கு அரைத்து வில்லைகளாகத் தட்டி உலர்ந்தபின் கஜபுடமிடவும். இதே போல் இரண்டாவது முறையும் செய்து புடமிட்டெடுக்க செந்தூரமாகும்.

அளவு :
100 – 200  மி.கி. வரை தேனுடன் தினம் இருவேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:
சோகை,பாண்டு, காமாலை முதலிய நோய்கள் தீரும்.