தேவையான பொருட்கள்:
1. தூய்மை செய்த அன்னபேதி- தேவையான அளவு
2. காடி நீர்- தேவையான அளவு
செய்முறை :
சுத்தம் செய்த அன்னபேதியை கல்வத்திலிட்டு காடியைக் கொண்டு நன்கு அரைத்து மெல்லிய வில்லைகளாய்த் தட்டி அகலிலிட்டு சீலை செய்து இரண்டு அல்லது மூன்று புடமிட செந்தூரமாகும்.
அளவு :
100-200 மி.லி. வரை தினம் இருவேளை தேனுடன் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
சுரம், வெளுப்பு நோய், காமாலை, சோகை குணமாகும். நெய்யுடன் கொடுக்க சீதபேதி குணமாகும்.