Contact Us

Tips Category View

ஹாப்யூட்டரின் கேப்சூல்

தேவையான சரக்குகள்:
1. அசோகப்பட்டை - 100 மி. கி
2. துளசி - 100 மி. கி
3. சந்தனம் - 100 மி. கி
4. அரசம்பட்டை - 100 மி. கி
5. அதிமதுரம் - 100 மி. கி
6. மருதோன்றி இலை - 100 மி. கி
7. மிளகு - 100 மி. கி
8. பிரம்மதண்டி - 100 மி. கி
9. வெண் மருது - 50 மி. கி
10. அமுக்கரா - 50 மி. கி
11. குங்கிலிய பற்பம் - 50 மி. கி
12. சிலாசத்து பற்பம் - 50 மி. கி

தயாரிக்கும் முறை:
1-10 வரையுள்ள சரக்குகளை சுத்தம் செய்து உலர்த்தி, பொடித்து, சலித்து இத்துடன் குங்கிலிய பற்பம் மற்றும் சிலாசத்து பற்பம் கலந்து 500 மி. கி வீதம் கேப்சூல்களில் அடைத்து காற்றுப் புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.

அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினம் 3 வேளைகள்.

தீரும் நோய்கள்:
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை, வெட்டை, மாதவிடாய் கோளாறு, கர்ப்பாயச கோளாறு, இடுப்பு வலி, பலகீனம், சோகை மற்றும் வலியுள்ள மாதவிடாய் குணமாகும். பெண்களுக்கு சிறந்த டானிக்.