தேவையான சரக்குகள்:
1. லிங்க செந்தூரம் - 62.5 மி. கி
2. அன்னபேதி செந்தூரம் - 75.0 மி. கி
3. படிகார பற்பம் - 75.0 மி. கி
4. நிலவேம்பு - 100.0 மி. கி
5. பற்படாகம் - 100.0 மி. கி
6. கோரைக்கிழங்கு - 50.0 மி. கி
7. அமுக்கரா - 750.0 மி. கி
8. அகில் - 50.0 மி. கி
9. சுக்கு - 12.0 மி. கி
10. மிளகு - 12.0 மி. கி
11. திப்பிலி - 37.5 மி. கி
12. கடுக்காய் - 50.0 மி. கி
13. நெல்லிக்காய் - 100.0 மி. கி
14. தான்றிக்காய் - 100.0 மி. கி
15. கஸ்தூரி மஞ்சள் - 125.0 மி. கி
தயாரிக்கும் விதம்:
மேற்கண்ட மூலிகைகளை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடித்து சலித்து மேற்படி பற்பம் மற்றும் செந்தூரங்களைக் கலந்து இடைவிடாது நன்றாக கல்வத்தில் அரைத்து 500 மி. கி.வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப் புகாத குப்பிகளில் பத்திரப்படுத்தவும்.
உபயோகிக்கும் அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினம் இருவேளை வெந்நீரில் சாப்பிடவும். மற்றும் சிறு குழந்தைகளுக்கு கேப்சூல் உள்ளிருக்கும் பவுடரை இருவேளை வெந்நீரில் கரைத்துக் கொடுக்கவும்.
பயன்கள்:
காய்ச்சல்,உடம்பு வலி, மற்றும் வாத, பித்த, கபசுரங்களுக்கு ஏற்றது.