தேவையான சரக்குகள்:
1. சந்தனத்தூள் - 200 மி. கி
2. அதிமதுரம் - 100 மி. கி
3. கோந்து - 100 மி. கி
4. வால் மிளகு - 100 மி. கி
5. பூனைக்கண் குங்கிலியம் - 60 மி. கி
6. வெடியுப்பு - 60 மி. கி
7. வெள்ளை குங்கிலியம் - 60 மி. கி
8. சிலாசத்து பற்பம் - 200 மி. கி
9. ரோஜாப்பூ - 100 மி. கி
தயாரிக்கும் முறை:
1-4 வரையுள்ள மற்றும் 6,9 சரக்குகளை உலர்த்தி பொடித்து சலித்து அத்துடன் பூனைக்கண் குங்கிலியம், வெள்ளை குங்கிலியம், சிலாசத்து பற்பம் போன்றவற்றைக் கலந்து இடைவிடாது அரைத்து 500 மி. கி. வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப் புகாத இடங்களில் பத்திரப்படுத்தவும்.
அளவு:
1-2 கேப்சல்கள் வீதம் தினமும் 3 வேளைகள் மற்றும் எல்லா வியாதிகளுக்கும் துணை மருந்தாகவும் உபயோகிக்கலாம்.
தீரும் நோய்கள்:
மேகவெட்டை, நீர்க்கடுப்பு, சிறுநீரகக் கற்கள், வயிற்று எரிச்சல், பயணச்சூடு, வாய் துர்நாற்றம், அஜீரணம்,அதிக உஷ்ணம் ஆகியவற்றைப் போக்கச் சிறந்தது.