தேவையான மருந்துகள் :
1. பறங்கி சக்கை -300 கி
2. நிலப்பனை கிழங்கு -150 கி
3. அமுக்கரா கிழங்கு -300 கி
4. தண்ணீர்விட்டான் கிழங்கு -60 கி
5. நன்னாரி வேர்ப்பட்டை -30 கி
6. முட்சங்கன் வேர்ப்பட்டை -30 கி
7. கடுக்காய் -30 கி
8. நெல்லிக்காய் -30 கி
9. தான்றிக்காய் -30 கி
10. இலவங்கப்பத்திரி -30 கி
11. சிறுநாகப்பூ -30 கி
12. வாய்விடங்கம் -30 கி
13. கொத்தமல்லி விதை -30 கி
14. சீரகம் -30 கி
15. கருஞ்சீரகம் -30 கி
16. ஓமம் -30 கி
17. குரோசினி ஓமம் -30 கி
18. சிற்றரத்தை -30 கி
19. சந்தனம் -30 கி
20. சிறுதேக்கு -30 கி
21. கண்டங்கத்திரி -30 கி
22. சித்திர மூல வேர்ப்பட்டை -30 கி
23. விலாமிச்சம் வேர் -30 கி
24. தக்கோலம் -30 கி
25. வால்மிளகு -30 கி
26. திராட்சை -30 கி
27. பேரீச்சை -30 கி
28. வெட்பாலையரிசி -30 கி
29. தாமரைக்கிழங்கு -30 கி
30. ஜாதிக்காய் -30 கி
31. இலவங்கம் -30 கி
32. ஜாதிப்பத்திரி -30 கி
33. கருவேப்பிலை -30 கி
34. சுக்கு -30 கி
35. மிளகு -30 கி
36. திப்பிலி -30 கி
37. இலவங்கப்பட்டை -30 கி
38. பால் -30 கி
39. சர்க்கரை -30 கி
40. தேன் -30 கி
41. நெய் -600கி
42. குங்குமப்பூ -4 கி
43. கோரோசனை -4 கி
44. பச்சைக் கற்பூரம் -4 கி
செய்முறை :
நெ. 1 முதல் 37 வரை உள்ள சரக்குகளை இளவறுப்பாக வறுத்துப் பொடித்து சலித்து வைக்கவும். பாலையும் சர்க்கரையையும் சேர்த்துக் காய்ச்சி பதத்தில் இறக்க, சூரணத்தைச் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து பின்னர் நெய், தேன் சேர்த்து இத்துடன் கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றையும் பொடித்துக் கலந்து வைக்கவும்.
அளவு :
3 -6 கிராம் வீதம் தினமும் இரு வேளைகள் வீதம் நாற்பது நாட்களுக்குக் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
மார்பு நோய், மேகப்புண், பறங்கிப்புண், கிரந்தி, சூலை, கண்ட மாலை, லிங்கப்புற்று, யோனிப்புற்று, சர்மரோகம், வெள்ளை, வாயு, வளி நோய், கபநோய் - 96, பிரமியம் என்கிற பிரமேகம் வெட்டை முதலியன.