தேவையான பொருட்கள்:
1. திப்பிலி -300 கி
2. மிளகு -150 கி
3. சுக்கு -150 கி
4. சீரகம் -30 கி
5. கருஞ்சீரகம் -30 கி
6. ஓமம் -30 கி
7. குரோசானி ஓமம் -30 கி
8. சிற்றரத்தை -30 கி
9. பேரரத்தை -30 கி
10. கடுக்காய் -30 கி
11. நெல்லிக்காய் -30 கி
12. சதகுப்பை -30 கி
13. தான்றிக்காய் -30 கி
14. இலவங்கம் -30 கி
15. இலவங்கப்பத்திரி -30 கி
16. தாளீச பத்திரி -30 கி
17. கொடி வேலி வேர்ப்பட்டை -30 கி
18. ஏலம் -30 கி
19. இலவங்கப்பட்டை -30 கி
20. சர்க்கரை -1050 கி
21. தேன் -1200 கி
செய்முறை :
நெ.1 முதல் 18 வரை உள்ள சரக்குகளை இளம் வறுப்பாக வறுத்துப் பொடித்து சலித்து வைக்கவும். சர்க்கரையைப் பாகு செய்து எல்லாச் சூரணங்களையும் அதில் கொட்டி கிளறி தேனும் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
அளவு :
3-6 கிராம் வீதம் தினமும் இரு வேளைகள் 100 மி.கி. தாமிரச் செந்தூரத்துடன் 45 நாட்களுக்குக் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
காசம் (இருமல்) மந்தாரகாசம், சயம், நாட்பட்ட இருமல், இரைப்பிருமல், கக்கல், இளைப்பு, கப நோய்கள் - 96.