Contact Us

Tips Category View

கந்தக இரசாயனம் (சித்த வைத்திய திரட்டு)

தேவையான பொருட்கள்:
1. சுத்தி செய்த கந்தகம்                         -300 கி
2. நாட்டு அமுக்கராக் கிழங்கு             -300 கி
3. பறங்கி சக்கை                                      -60 கி
4. கடுக்காய்                                               -30 கி
5. நெல்லிக்காய்                                         -30 கி
6. தான்றிக்காய்                                         -30 கி
7. சுக்கு                                                          -30 கி
8. மிளகு                                                         -30 கி
9. திப்பிலி                                                     -30 கி
10. வாய்விடங்கம்                                        -30 கி
11. ஏலம்                                                      -30 கி
12. இலவங்கம்                                               -30 கி
13. சந்தனம்                                               -30 கி
14. கடலைப்பருப்பு                                       -30 கி
15. சுத்தி செய்த சேராங்கொட்டை         -30 கி
16. 16.சித்திர மூலம்                                      -30 கி
17. 17 நாட்டுச் சர்க்கரை                             -400 கி
18. தேன்                                                           -200 கி
19. நெய்                                                           -200 கி

செய்முறை :
கந்தகத்தைத் தனியே பொடித்து வைக்கவும். நெ.2 முதல் 16 வரையுள்ள சரக்குகளைப் பொடித்துச் சலித்து வைக்கவும்.சேராங் கொட்டையை நெய்யிலிட்டு கொதிக்க வைக்க அதிலிருந்து எண்ணெய் பிரிவதோடு கொட்டையும் நீக்கி விடவும். நாட்டு சர்க்கரையைக் கரைத்து பாகு வைத்து பதம் வந்ததும் கந்தகத்தையும் மற்ற சூரணங்களையும் அதில் சேர்த்து நன்கு கிளறி பக்குவத்தில் எடுத்துக் கொள்ளவும்.

அளவு: 
5-10 கிராம் வீதம் தினமும் இரு வேளைகள் 40 நாட்கள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள் :
மேக நோய்கள், மேக நீர், வெள்ளை, தோல் நோய்கள், குஷ்டம், வெண்குஷ்டம் முதலியவற்றிற்கும் பூச்சிக் கடிக்கும் கொடுக்கலாம்.

பத்தியம்:
              புளி நீக்கவும், சிறு பயிறு, துவரை, தூதுவளை, மணத்தக்காளி, கத்திரிப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, கொத்த மல்லிக் கீரை, நெய், மோர், தயிர் இவைகளை உண்ணவும்.