தேவையான சரக்குகள்:
1. சுத்தி செய்த கந்தகம் - 100 மி. கி
2. பரங்கிப்பட்டை - 100 மி. கி
3. அமுக்கிரா - 100 மி. கி
4. தண்ணீர்விட்டான் கிழங்கு - 100 மி. கி
5. நன்னாரி - 100 மி. கி
6. வல்லாரை - 100 மி. கி
7. ஓமம் - 100 மி. கி
8. சித்திரமூலப்பட்டை - 100 மி. கி
9. திரிபலா சூரணம் - 100 மி. கி
10. திரிகடுகு சூரணம் - 100 மி. கி
தயாரிக்கும் முறை:
1-8 எண் வரையுள்ள சரக்குகளை உலர்த்திப் பொடித்து அத்துடன் திரிகடுகு மற்றும் திரிபலா சூரணம் கலந்து நன்றாக அரைத்து 500 மி.கி கேப்சூல்களில் நிரப்பி, காற்றுப்புகாதகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினமும் 2 வேளைகள்.
பயன்கள்:
வெடிசூலை, மேகசூலை, இடிசூலை, தொழுநோய், விஷ நீர், சிரங்கு,புழுவெட்டு, தடிப்பு மூலம், பவுத்திரம், மேகம் ஆகியவற்றைப் போக்கி ரத்த சுத்திகரிப்புக்கு சிறந்தது.