Contact Us

Tips Category View

வான்குமரி கல்பம் (ஞான வெட்டியான் முறை)

தேவையான பொருட்கள் :
1. குமரிச்சாறு              -300 மி.லி
2. சர்க்கரை                  -300 கி
3. கிராம்பு                     -15 கி
4. ஜாதிக்காய்              -20 கி
5. ஏலம்                           -5 கி
6. சீரகம்                         -40 கி
7. மிளகு                         -30 கி
8. நெய்                           -140 கி
9. தேன்                          -200 கி

செய்முறை :
குமரிச்சாறு, சர்க்கரை இவற்றினை ஒன்றாய் சேர்த்து கரைத்து வடிகட்டி அடுப்பிலிட்டு காய்ச்சி பாகுபதம் வரும்போது, கிராம்பு, ஜாதிக்காய், ஏலம், சீரகம், மிளகு இவைகளை இடித்துப் பொடித்து சூரணித்து மேற்படி பாகில் தூவி கிண்டி, நெய் சேர்த்து இறக்கி வைக்கவும். லேகியம் சூடு ஆறிய பின் தேன் கலந்து வைக்கவும்.

அளவு :
2 - 5 கிராம் இரு வேளைகள் உண்ணவும்.

தீரும் நோய்கள் :
வெள்ளை, வெட்டை, கிரந்தி, இருமல், சளி, பசியின்மை, மலச்சிக்கலைப் போக்கி இரத்தத்தை சுத்தப்படுத்த தேக பலத்தை உண்டாக்குகிறது.