Contact Us

Tips Category View

ஏப்பைலோ ஹெர்ப் கேப்சூல்

தேவையான சரக்குகள்:
1. காட்டுக் கருணை - 60 மி. கி                        
2. பிரண்டை - 40 மி. கி
3. மருள் கிழங்கு - 60 மி. கி
4. குமரி வேர் - 60 மி. கி
5. மாம்பருப்பு - 40 மி. கி
6. கடுக்காய்த் தோல் - 40 மி. கி
7. சித்திர மூல வேர்ப்பட்டை - 60 மி. கி
8. கோரைக்கிழங்கு - 60 மி. கி
9. சரக்கொன்றை புலி - 60 மி. கி
10. தேத்தான் கொட்டை - 60 மி. கி
11. திரி கடுகு - 60 மி. கி
12. திரிபலா - 60 மி. கி
13. சீரகம் - 20 மி. கி
14. நத்தைச் சூரி - 40 மி. கி
15. முத்துச்சி சிப்பி பற்பம் - 40 மி. கி
16. சிலாசத்து பற்பம் - 40 மி. கி
17. வெள்ளி பற்பம் - 20 மி. கி
18. துத்தி - 180 மி. கி

தயாரிக்கும் முறை:
1-18 எண் வரையுள்ள சரக்குகளை உலர்த்திப் பொடித்து சலித்து வைக்கவும். இத்துடன் நத்தை பற்பம், முத்துச்சிப்பி பற்பம், சிலாசத்து பற்பம், வெள்ளி பற்பம் இவற்றினைக் கலந்து நன்றாக அரைத்து 50மி. கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி பயன்படுத்தவும்.

அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினமும் 2 வேளைகள்.

பயன்கள்:
மூலம், பவுத்திரம், ரத்தமூலம், ஆசனவாய் எரிச்சல், அரிப்பு, மலச்சிக்கல் முதலிய நோய்களுக்கு ஏற்றது.