தேவையான சரக்குகள்:
1. அவுரி இலை -150 மி . கி
2. கீழாநெல்லி - 150 மி . கி
3. நிலவேம்பு - 100 மி . கி
4. அதிமதுரம் - 100 மி . கி
5. அன்னபேதி செந்தூரம் - 200 மி . கி
6. மண்டூரச் செந்தூரம் - 200 மி . கி
7. வெள்ளி பற்பம் - 200 மி . கி
தயாரிக்கும் முறை:
1-4 வரையுள்ள மூலிகைகளைத் தூய்மை செய்து உலர்த்தி பொடித்து சலித்து அத்துடன் 5-7 வரையுள்ளவற்றை கலந்து இடைவிடாது அரைத்து 500 மில்லி கிராம் வீதம் கேப்சூல்களில் நிரப்பி வைக்கவும். இவற்றைத் தூய்மையான காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல் வீதம் தினமும் 3 வேளை மற்றும் எல்லா வியாதிக்கும் துணை மருந்தாகவும் உபயோகிக்கலாம்
தீரும் வியாதிகள்:
மஞ்சள் காமாலை, பாண்டு,சோகை, அஜீரணக் கோளாறு, வாய்வு,கல்லீரல் நோய்கள் முதலியவற்றைப் போக்கும்.