Contact Us

Tips Category View

நெல்லிக்காய் லேகியம் (ஆத்மரட்சாமிர்தம்)

தேவையான பொருட்கள் :
1. நெல்லி வற்றல்           -2100 கி
2. தண்ணீர்                      -1600 மி.லி
3. சர்க்கரை                     -875 கி
4. அதிமதுரம்                  -70 கி
5. கூகைநீர்                      -70 கி
6. முந்திரிப்பழம்            -70 கி
7. பேரிச்சம்பழம்           -70 கி
8. திப்பிலி                         -105 கி
9. காகம்                            -200 கி
10. நெய்                              -200 கி

செய்முறை:
நெல்லி வற்றலை தண்ணீரில் போட்டு எட்டுக்கு ஒன்றாய் வற்ற வைத்து வடித்த கியாழத்தில் சர்க்கரையை சேர்த்து பாகு செய்து அதில் அதிமதுரம், கூகை நீர், முந்திரிப் பழம், பேரீச்சம்பழம், திப்பிலி இவைகளை அரைத்து நெய்விட்டுக் கிண்டி மெழுகு பதத்தில் தேன் விட்டு பிசைந்து இறக்கி வைக்கவும்.

அளவு: 
வேளை ஒன்றுக்கு 5-10 கிராம் உண்ணவும்.

தீரும் நோய்கள் :
வாந்தி, பித்தம், காமாலை, பித்தபாண்டு, வறட்சி, திமிர்வாயு, சோகை, நீர்ச்சுருக்கு, குன்மம், உடல் எரிவு நீங்கும்.