Contact Us

Tips Category View

கடுக்காய் லேகியம் (சித்த மருத்துவ அனுபவ முறை)

தேவையான பொருட்கள்
1. கடுக்காய்               -3.5 கி.கி.
2. சிவதை                    -35 கி
3. இஞ்சி                       -35 கி
4. மிளகு                       -35 கி
5. ஓமம்                        -35 கி
6. வாய்விடங்கம்      -35 கி
7. திப்பிலி                   -35 கி
8. ஆவின் நெய்          -1.6 லி
9. தேன்                        -1லி

செய்முறை :
கடுக்காயை இடித்து எட்டு பங்கு நீர் கலந்து பின்னர் அதை ஒரு பங்காக வற்ற வைத்து சர்க்கரையுடன் சேர்த்து பாகுபதம் செய்து அதில் சிவதை, இஞ்சி, மிளகு, ஓமம், வாய்விடங்கம், திப்பிலி அரைத்துப் போட்டு நெய்விட்டுக் கிண்டி மெழுகு பதத்தில் தேன்விட்டு கலந்து வைக்கவும்.

அளவு:
2 - 6 கிராம் வரை தினம் ஒரு வேளை சாப்பிடவும்.

தீரும் நோய்கள் :
மாந்தம், சூலை, மலச்சிக்கல், வாயுத் தொல்லை, மூலவாய், வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும். இது ஒரு மலமிளக்கி லேகியம்.