தேவையான சரக்குகள் :
1. வங்க செந்தூரம் -200 கி.
2. மிருதார் சிருங்கி -200 கி.
3. மயில் துத்தம் -100 கி.
4. கார்போக அரிசி -50 கி.
5. சேங்கோட்டை -50 கி.
6. மஞ்சள் மெழுகு -400 கி.
செய்முறை :
தேன் மெழுகு (அ) மஞ்சள் மெழுகை பாத்திரத்திலிட்டு அதை நீருள்ள பாத்திரத்தில் வைத்து சூடுபடுத்தி மெழுகினை உருகச் செய்ய வேண்டும். அத்துடன் மேற்படி சரக்குகளை நன்கு கலந்து சூடு ஆறுவதற்கு முன்பே மிதமான சூட்டில் டப்பாக்களில் அடைத்து பத்திரப்படுத்தவும்.
தீரும் நோய்கள் :
அடிபட்ட புண், புரையோடிய புண்கள், காயங்கள், கட்டிகள், பருக்கள் முதலிவற்றிற்கு சிறந்தது.